பாலமாத்தளன் பிரதேசத்தில் பாரிய மோதல். 15 புலிகளின் உடலங்கள் மீட்பு.
நேற்று பிற்பகல் புதுக்குடியிருப்பு பாலமாத்தளன் பிரதேசத்தில் ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் உக்கிரமோதல் இடம்பெற்றுள்ளது. மோதல்களில் படையினரின் கைஓங்கி புலிகள் பலத்த சேதத்துடன் பின்வாங்கியுள்ளனர். இத்தாக்குதலின் பின்னர் அப்பிரதேசத்தில் படையினர் நாடத்திய தேடுதலில் புலிகளின் 15 சடலங்களையும் 20 ரி 56 ரக துப்பாக்கிகளையும் பிற இராணுவ உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பாலமத்தளன் பிரதேசத்தில் புலிகளின் பாதுகாப்பு மண் அணைக்கட்டொன்றை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளால் படையினரை இலக்கு வைத்து பொருத்தப்பட்டிருந்த 25 கிகி எடைகொண்ட கிளேமோர் ஒன்றை மீட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment