சிறுமியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட த.ம.வி புலிகள் உறுப்பினரின் உடலத்தை பொறுப்பெடுக்க தாயார் மறுப்பு.
திருகோணமலையில் சிறுமியொருவரை கடத்திச் சென்று கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் நால்வரில் நிசான் எனப்படுபவர் பொலிஸ் வண்டியில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார். மரண பரிசோதனைகள் முடிவடைந்து உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்திவிட்ட போதும் உடலத்தை பாரமெடுக்க அவரது தாயார் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சடலம் இன்று அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment