Monday, March 23, 2009

புலிகள் சரணடையும்வரை பேச்சுக்கு இடமில்லை: அரசாங்கம்.

நேற்று பிரித்தானிய சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், தாம் எவ்வித முன் நிபந்தனைகளும் அற்ற பேச்சுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அரசு படையினர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல பிரதேசங்களையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டவந்துள்ளதுடன் புலிகளை 28 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் முடக்கியுள்ளபோது புலிகள் சரணடையும் வரை பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளது.

புலிகள் படுதோல்வியை தழுவியுள்ள நிலையில் தமது தலைவர் பிரபாகரனை தப்ப வைத்துக் கொள்வதற்காக அவர்கள் தொடர்ச்சியாக யுத்த நிறுத்தம் ஒன்றினைக் கோரிவருவதாக தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன, நடேசனுக்கு அவரது தலைவரை தப்ப வைத்துக்கொள்ள வேண்டும் என்றதோர் உண்மையான நாட்டம் இருக்குமாக இருந்தால் அவர்கள் சரணடைய வேண்டும் அப்போதுதான் சமாதானத்திற்கான வழி திறக்கும் என்றார்.

No comments:

Post a Comment