களனிய பல்கலைக்கழக மாணவிகள் பொலிஸாருக்கெதிராக மனித உரிமைகள் மீறல் வழக்குத்தாக்கல்.
கடந்த பெப்ரவரி மாதம் களனிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதோர் மாணவர்களுக்கிடையிலான கலகத்தை அடக்க சென்ற பொலிஸார் மாணவிகள் மீது நடந்து கொண்ட விதம் தவறதானதெனவும் அம் மாணவிகளின் உரிமைகளை மீறுவதாகவும் அமைந்துள்ளதாகவும் மாணவிகள் குழு ஒன்று மேல் நீதிமன்றில் மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
கலகத்தை அடக்க சென்றிருந்த பொலிஸார் மாணவிகளை அடித்து துன்புறத்தியதாகவும் கலகத்தின் போது பெண் பொலிஸாரின் பிரசன்னம் இல்லாமல் 9 மாணவிகளை பொலிஸார் கைது செய்ததாகவும் அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் கிரிபத்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பேலியகொட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment