Thursday, March 26, 2009

தமிழீழ விடுதலைப் புலிகள்-கடைசித் தகவல் -ஒன்றாரியாவில் இருந்து ஒரு மாத்தையா அபிமானி-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 242அங்கத்தவர்கள் கனடா கடவுச் சீட்டுகளுடன் பிரித்தானியாவில் தஞ்சமடைய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.அதிமுக்கிய உறுப்பினர்களான இந்த 242 பேரும் ஏற்கனவே வன்னியை விட்டு வெளியேறி விட்டார்கள். இதில் 65 பேர் கொழும்பிலும், மீதி 177 பேர் இந்தியாவிலும் பிரயாணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களது புகைப்படத்துடன் கூடிய கனடா கடவுச்சீட்டு கடந்த 20 நாட்களுக்கு முன் கனடா ஒன்றாரியாவில் உள்ள போனா பார்ட்டி பிளேஸ் இன்டோர் பிளேகிறவுண்ட் பகுதியில் வசிக்கும் ஒரு விடுதலைப் புலி பயண முகவரால் தயாரிக்கப்பட்டு விட்டது. ஒரு கடவுச் சீட்டுக்கு பதின் ஐயாயிரம் யு.எஸ்.டொலர் என்ற அடிப்படையில் இக்கடவுச்சீட்டு நிஜமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இது கனடா குடிவரவுத் துறை அதிகாரி ஒருவரின் துணையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தலைநகர் கொழும்பை அண்டிய புறநகர் பகுதியில் உள்ள சிற்றூர்களில் தங்கியுள்ள அந்த 72 விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது கனடிய கடவுச்சீட்டில் கொழும்பு அரைவல் விஸாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள ஒரு துடிப்பான வேற்று மத அதிகாரி ஒரு அரைவல் விஸாவுக்கு பத்து லட்ச ரூபா என
பேரம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்.

இந்தியாவில் உள்ள 177 பேரில் ஒரு சிலருக்கு ஏற்கனவே அரைவல் விஸா தயாராகி விட்டது. இந்த அரைவல் விஸாவை உபயோகித்து தாங்கள் ஏற்கனவே கனடாவில் இருந்து வந்தவர்கள் என சொல்லி இங்கிலாந்து புறப்பட்டு விடலாம். அவ்வாறு அரைவல் விஸா கிடைக்காத பட்சத்தில் இந்திய, சிறிலங்கா கடவுச் சீட்டுக்களை உபயோகித்து 'புறுனே' 'தாறுஸ்ஸலாம்' (தன்ஸானியா)ஆகிய நாடுகளுக்கு வந்து,அங்கிருந்து அரைவல் விஸா எடுத்துக் கொண்டு இங்கிலாந்து வருவதற்கும் ஒரு முயற்சி செய்யப்படுகிறது.

தன்ஸானியாவில் கனடா கடவுச்சீட்டுக்கு அரைவல் விஸா எடுக்கும் முயற்சி ஏற்கனவே பாதி முடிந்து விட்டது. இதை ஒரு கென்ய பிரஜை செய்து கொண்டிருக்கிறார்.
இதில் 30க்கு மேற்பட்ட பெண்களும் அடங்குவர். இந்தியாவில் இருந்து 22 பேர் ஏலவே தன்ஸானியா வந்து விட்டனர். அரைவல் விஸாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் நிறைய பேர் மாத்தையா அபிமானிகளை கொன்றவர்கள். இதனால் இங்கிலாந்தில் உள்ள மாத்தயாவின் அபிமானிகள் இவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு ஈழப் போர் இங்கிலாந்தில் எதிர் வரும் மாதங்களில் தொடங்கலாம்.

No comments:

Post a Comment