Saturday, March 21, 2009

பிரபாகரனும் அவரது மகனும் புதுமாத்தளன் மோதல் தவிர்ப்பு பிரதேசங்களில்.



புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிவரும் மக்களின் மற்றும் இராணுவப் புலனாய்வத் தரப்பினரின் தகவல்களின் ஊடாக பிரபாகரன் மற்றும் அவரது மகன் சாள்ஸ் அன்ரனி ஆகியோர் புதுமாத்தளன் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மக்களுக்காக யுத்த தவிர்ப்பு வலயமாக ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பல தடவைகள் காணப்பட்டதாக பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது.

வன்னியிலிருந்துவரும் மக்களின் தரவுகளின் அடிப்படையில் அதிநவீன ஆயுதங்கள் தரித்த மெய்பாதுகாவலர்களுடன் பிரபாகரனும் அவரது மகனும் அப்பரதேசங்களுள் வருவதாகவும் அவர்கள் சாதாரண உடைகளிலே காணப்படுவதாகவும் புதுமாத்தளன் பகுதியில் மக்கள் தங்கியுள்ள பகுதிகளுள் அவர்கள் பங்கர்களை அமைத்துள்ளதுடன் சில சமயங்களில் அங்கு தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரபாகரன் நாட்டை விட்டு வெளியேறினால் அவர் எதிர்நோக்கப் கூடிய அபாயங்களை தெரிந்துவைத்துள்ளதுடன், இறுதி வரை பலவழிகளால் படையினர் அவர் இருக்கும் இடத்தை அடைவதை தடுப்பதற்கு முயற்சிப்பார் எனவும் அதற்கான சர்வதேச அனுதாபத்தை தேடிக்கொள்ளும் பொருட்டு மக்கள் மீது மிலேச்சத்தனமான தாத்குதல்களை நாடத்தி விட்டு அனுதாபம் தேட முற்பட முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com