Thursday, March 19, 2009

‘புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச அமைப்புகள் மட்டத்தில் ஊடுருவல்’



ஐ.நா ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை புலப்படுத்துகிறதென்கிறார் அமைச்சர் கெஹெலிய

புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச அமை ப்புக்கள், நிறுவனங்கள் மட்டத்தில் ஊடுரு வியுள்ளமை ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை புலப்படுத்துவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் ஐ.நா.வின் அலுவலகங்கள் இருந்த போதிலும் அதிலிருந்து எதுவித தகவல்களையும் பெறாது உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளமையை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரது அறிக்கையை முற்றாக மறுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் உரையாற்றுகையில்:-

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை தற்பொழுது முழு உலகமும் புரிந்து கொண்டு ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றது.

இந்த அடிப்படையில், பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் கட்டத்தில் இலங்கை இருக்கும் நிலையில் சில சர்வதே அமைப்புக்கள் இன்னும் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளிலும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.

ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை இதனை புலப்படுத்துகிறது. இவரது அறிக்கை “தமிழ் நெட்” என்ற புலிகள் சார்பு இணையத் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களையும், எண்ணிக்கைகளையும் கொண்டதாகவே அமைந்துள்ளது என்பது உறுதியாக கூற முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அமைப் புக்களிலும் புலிகள் ஊடுருவியுள்ளமையும், தங்களது அழுத்தங்களை பிரயோகித்து வருவதும் தெளிவாக புலப் படுகிறது. புலிகளின் பிடியில் மூன்றரை இலட்சம் மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்களை தெரிவித்து வந்த சில சர்வதேச அமைப்புக்களும், நிறுவனங்களும் சுமார் இரண்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையில் ஒரு இலட்சம் மக்களே இருப்பதாக கூறுகின்றனர்.

அவர்கள் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேவைக்கேற்க மாறுபட்ட எண்ணிக்கைகளை தெரிவித்து வருவதும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடக மத்திய நிலை யத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க, விமானப் படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment