இந்தியப் பிரதமரின் செயலாளர் நாளை இலங்கை வருகின்றார்.
ஜனாதிபதி மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்காவின் அழைப்பின்பேரில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் கொள்கை அமுல்படுத்தலுக்கான செயலாளர் திரு. T.K.A. நாயிர் நாளை மார்ச் 25ம் திகதி இலங்கை வருகின்றார். பொது நிர்வாக சேவைகளில் உள்ள முன்னேற்றங்களை இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் வரும் இவர் அரசின் உயர் மட்ட அதிகாரிகள் மத்தியில் தமது அனுபவங்களையும் சவால்களையும் பகிர்ந்து கொள்வார் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment