Friday, March 20, 2009

பிரபாகரனின் அதிகார வெறியும் தமிழ் மக்களின் பேரழிவும்..!!! -இராவணன்-

என் அன்பார்ந்த தமிழ் இணையத்தள வாசகர்களே!..

சிறிலங்கா அரசாங்கங்களினால் மிககொடுரமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவிற்காக போராட பல இயக்கங்கள் தோன்றின இவ்இயக்கங்களின் மிகப்பெரும் வளாச்சிக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கும் மிகப்பெரும் ஆதரவை வழங்கியது எமதண்டை நாடான இந்தியப் பேரரசு இது எந்த தமிழர்களாலும் மறுக்க முடியாது ஒரு உண்மையே ஆனால் இன்று இந்தியப் பேரரசானது இலங்கை சிங்கள அரசிற்கு உதவி செய்து தமிழ் மக்களை அழிப்பதற்கு புலிகளால் வலுக்கட்டாயமாக தள்ளப் பட்டுள்ளது.

1984 ம் ஆண்டு எம்பி திரு.தர்மலிங்கம் திரு.ஆலாலசுந்தரம் அவர்களை தமிழ் மக்களின் விடிவுக்கு போராடப் புறப்பட்ட இயக்கத்தினால் மிகவும் கோழைத்தனமாக எம்மினத்தின் தலைவர்களே சுட்டுக் கொன்றனர். இவர்களின் நினைவு அஞ்சலிக்கூட்டம் இந்தியாவில் சென்னையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பெரும் திரளான பொது மக்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்கு சமூகம் அளிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது இவ்வஞசலிக் கூட்டத்தில் இறுதி உரையாற்றிய தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் ஆற்றிய உரை இன்றும் எனது காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதனை இக்கால கட்டத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என எண்ணுகின்றேன்.

இவ்வுரையில் தோழர் உமாமகேஸ்வரன் அவர்கள் இந்திய அரசை தமிழீழத்திற்காக போராடப் புறப்பட்ட இயக்கங்களின் செயற்பாடுகளால் எமது பொது எதிரியான சிங்கள இனவெறி அரசின் நண்பனாகவோ அல்லது அவர்களின் தலைவலிக்கு மருந்து தொடுத்து உதவும் செயலையோ செய்ய விடுவோமேயானால் இலங்கை தமிழ்மக்களின் பேரழிவை எவராலும் காப்பாற்ற முடியாது என மிக தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட உரை இன்று பிரபாகரனின் அதிகார வெறியாலும் கொடூர படுகொலைகளினாலும் இந்திய அரசு இலங்கை பேரினவாத அரசின் நண்பனாக மாற்றப்பட்டுள்ளது என்பதை தமிழ் மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளது இது மட்டுமல்ல தோழர் உமாமகேஸ்வரனை பலதடவைகள் இந்திய பெருமதிப்புக்குரிய அன்னை இந்திராகாந்தி இலங்கைப் பிரச்சனையை அறிவதற்கும் ஆலோசனை நடத்துவதற்;கும் அழைக்கும் ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பத் தேவையில்லை என்றும் நீங்கள் நீங்கள் இராணுவ தளபாட உதவிகளும் அரசியல் ஆலோசனையும் செய்யுங்கள் என்று வலியுறுத்துவார்.

இந்த வலியுறுத்தலின் பெயரில் அனைத்து இலங்கைத் தமிழ் இயக்கங்களுக்கும் இராணுவபயிற்சி கொடுத்தது இந்திய அரசாங்கம் எனினும் இந்திராகாந்தியின் இழப்பானது இலங்கை தமிழ் மக்களின் துர் அதிஸ்டமே இன்று இவ்வுண்மை இலங்கை தமிழ் அரசியல் வாதிகளினாலும் இயக்கங்களினாலும் திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது. என்றைக்குமே இந்தியப் பேரரசு தனது மக்களின் நலனை கருத்தில் கொண்டே தனது அண்டை நாடுகளுக்கு இராஜதந்திர உதவிகளை வழங்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகத்திலே பல நாடுகளில் மாநில சுயாட்சி உண்டு ஆனால் அங்கெல்லாம் பல கலை கலாச்சார மொழிகள் இருந்தாலும் ஒரே மொழிக்கு கீழ்த்தான் ஆட்சி அதிகாரம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்திய திருநாடானது அதற்கு மாறானது அனைத்து வளங்களும் இயற்கையாகவே பொருந்திய தெய்வீக பூமியான பாரத திருநாட்டில் பல மொழிகள் பல இன மக்கள் பல்கலைகலாச்சாரங்கள் ஒருங்கே கூடியுள்ளது அதற்கேற்றவாறு அந்தந்த மொழி பேசும் மாநிலங்களில் அந்தந்த மொழியில் அரசாட்சி செய்யக்கூடிய உலகத்திலே முதலாவது ஜனநாயக பெரும் திரு நாடு இந்தியா எனலாம். இவைக்கேற்றவாறு தான் இந்தியப் பாதுகாப்பு புலனாய்வு படைகள் செயற்படும் ன்பதை புலிகள் புரிந்து கொள்ளவில்லை காரணம் எந்தவித அரசியல் ஞானமோ எந்த தொலைநோக்கு சிந்தனையோ இல்லாத கொலை வெறிபிடித்த மனநோயாளியான புலிகளின் தலைமையிலான புலிகள் ஈழத்தமிழ் நாட்டினை பேரழிவிற்கு தள்ளியுள்னர்.

பலதடவைகள் புலிகளுக்கு தமிழ் மக்களிற்கு உரிமை கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பக்கள், சந்தர்ப்பங்கள் கிடைத்துமே தான் என்ற அதிகாரத்தினாலும் பதவி வெறியாலும் துப்பாக்கி கலாச்சாரத்தாலும் எமது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதாள பாதாளத்தில் தள்ளி முடக்கியுள்ளனர். இறுதியாக வந்த நோர்வே தலைமையிலான ரணில் பிரபா ஒப்பந்தந்தை விட்டுக் கொடுப்போம் இதய சுத்தியோடும் அணுக வேண்டிய பிரபாகரன் தனது ஆணவ வெறியாலும், கொலைக்கலாச்சாரத்தாலும் சீர் அழித்தள்ளார் இக்கால கட்டத்தில் யுத்த விதிகளையும் யுத்த தர்மத்தையும் மிக மோசமாக ஜயாயிரம் தடவைக்கு மேலாக மீறி மாற்றியமைக்க தலைவர்கள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் என தமிழினத்தையே கொன்றொழித்தள்ளார். இதனை சிங்கள அரசு கைகட்டி அகமகிழ்ச்சியில் மௌனமாக பார்த்து ரசித்தது.

இதுமட்டுமல்ல வயது குறைந்த சிறார்களை பெற்றோரின் அழுகுரல்களுக்கும் மத்தியில் வலுக்கட்டாயமாக கடத்தி இராணுவ பயிற்சியளித்த இராணுவ ஒப்பத்தந்தை மீறி ஜரோப்பிய நாடுகளின் கட்டாய நிதி சேகரிப்பையும் இராணுவ தளபாடங்களையம் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும் வந்ததையும் இணைத்தலைமை நாடுகளும் இந்திய அமெரிக்க நாடுகளும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்ததென்பதை ஆயுத கலாச்சாரத்தில் மோகங்கொண்ட பிரபாகரனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

பிரபாகரனின் இத்தகைய செயலை இலங்கை அரசை விட இந்திய பேரரசானது பல வழிகளிலும் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டேயிருந்தது மௌனமாக அவதானித்துக்கொண்டிருந்த இந்திய பேரரசுக்கு பேரிடியாகவும், பேர் அதிர்ச்சியாகவும் அமைந்த சம்பவம் புலிகளின் ஓடபாதையும் விமானமும், இரசாயன குண்டு உற்பத்தியினையும் தனது செய்மதி தொழில் நுட்பத்தினூடாகவும் புலனாய்வு துறையாலும் திட்டவட்டமபக அறிந்துகொண்ட இந்திய அரசு பேச்சு வார்த்தைக்கு தலைமை தாங்கும் நோர்வே நாட்டிற்கு மிகவும் உறுதியாகவும் ஆணித்தரமாகவும் கடுமையான தொனியில் வலியுறுத்தியும் சர்வதேச பயங்கரவாத புலிகள் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.

இந்திய பேரரசு புலிகளை நன்கு புரிந்து கொண்டது மீண்டும் கந்தகாரை போன்று விமானத்தை கடத்தி பணயக்கைதியாக வைத்து பயங்கரவாதிகளை மீட்கும் சம்பவம் இனி நடைபெறக் கூடாது என்பதையும் இந்தியா தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தது புலிகள் இந்திய, இலங்கை பயணிகள் விமானங்களை மாலைதீவு போன்ற சிறு நாடுகளின் விமானநிலைய அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து விமானநிலையத்தில் உள்ள விமாங்களை கடத்தி வன்னியில் உள்ள தங்களது விமான ஓடுபாதையில் இறக்கி சர்வதேச பயங்கரவாதிகளை வெளியில் எடுக்கும் திட்டத்தையும் இந்தியப் புலனாய்வுத் துறை நன்கு அறிந்திருந்தது. இக்காரணத்தால் இந்தியா தனது முழு ஆதரவையும் இலங்கை அரசிற்கு வழங்க வேண்டிய வலுக்கட்டாயத்திற்கு புலிகள் தள்ளியுள்ளனர் என்பதை அணைத்து தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் சனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது பிரபாகரனால் ரணில் ஒரு நரி என்றும் மகிந்தஒரு யதார்த்தவாதி என்றும் சொல்லி பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் உள்ள ஒரு மேலதிகாரி ஊடாக திருவாளர் டெடிகிளாஸ் என்ற இயற்பெயர் கொண்ட அன்ரன் பாலசிங்கத்தின் ஊடாக பணப் பேரம் பேசி மிக பெருந்தொகையான ஸ்ரேலிங் புவண் பெற்று வன்னியில் உள்ள மக்களை வாக்களிக்கவிடாது இடைநிறுத்தி மகிந்தாவை ஜனாதிபதி என்ற ஆட்சி அதிகாரத்துக்குள் அமர்த்திய புலிகள் மகிந்தாவின் சுயரூபத்தையும் அதற்கான பலாபலன்களையும் இன்றுவரையும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல புலிகளின் தோல்விக்கு காரணம் புலிகள் எதிரியை சர்வசாதாரணமாக எடை போட்டது ஒப்பந்த காலத்தில் இலங்கை இனவெறி அரசு தனது இராணுவ கட்டமைப்பைமாற்றியமைத்து அவர்களுக்குள் ஊடுருவி இருந்த இராணுவத்தினரை இனம் கண்டு களையெடுத்தனர் பின் வெளிநாட்டு சிறப்பு பயிற்சிகளுக்கும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் சிறப்பு பயிற்சி எடுத்து சிங்கள இராணுவத்தினர் தம்மை தயார்படுத்தி கொண்டனர்.

இது மட்டுமல்ல இலக்கு தவறாமல் தாக்கக் கூடிய அளவிற்கு விமானிகளும் நன்கு பயிற்சி பெற்றனர் ஆனால் புலிகளோ போராட்ட காலத்தில் ஏ9 பாதையால் பணம் பறிப்பதையும் கப்பம் வாங்குவதிலும், கொலை கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற வன்முறைகளை அரங்கேற்றியதுடன் திருமணம் முடித்து உறவாடுவதையுமே விரிவுபடுத்தினர். இதன் விளைவே மூதூர் நகரை புலிகள் ஒப்பந்தத்திற்கு மாறாக கைப்பற்றி முஸ்லீம் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொண்டதை தொடர்ந்து ஒரு வாரத்தின்பின் புலிகளின் தொலைத் தொடர்பாளர் உயரமான தெலைத்தொடர்பு கோபுரத்தின் மேல் நின்று தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கும் போது அவரை சுட்டு வீழ்த்தி புலிகளின் அனைத்து தொடர்புகளையும் துண்டித்ததுடன் அங்கிருந்த அனைத்து புலிகளையுமே சுட்டுக் கொன்றனர் இலங்கை இரானுவத்தினர். அப்போது கூட தலைவரின் நேரடி நுட்பமான அறிவால் இராணுவத்தின் பலனை புரிந்து கொள்ள முடியாதது ஒரு வேடிக்கையே.

திராவிட இனத்தின் மிக முக்கியமான பண்பு தாகம் தீர்ப்பதே இதில் இன, மத, மொழி வேறுபாடு காட்டுவது கிடையது. பிரபாகரனோ மூவினத்து மக்களுக்கும் பயனளிக்கும் மாவிலாறு தண்ணீரை பூட்டி பெற்ற குழந்தையே போல் நெற்பயிரை பாதுகாக்கும் விவசாய மக்களை கண்ணீருடன் அலைய விட்டதன் விளைவாக இன்று கிழக்குமாகாணத்தையும் இழந்தனர். அன்று கூட இலங்கை அரசின் போர் தந்த உயோகத்தை நேரடி வழிகாட்டலில் உள்ள இந்த மன நோயாளியினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கை அரசின் விமானப்படை போராட்ட வரலாற்றில் மிக துல்லியமாக புலிகளின் தேனகம் முகாமை நிர்மூலமாக்கிய போதும் கூட தன்னினத்தை தான் அழிக்கும் பிரபாகரனுக்கு புரியாமல் போனது வேடிக்கையே. பின் புலிகளின் பிரபாகரன் அணி கிழக்கு மாகாணத்தில் இருந்து பூரணமாக விரட்டப்பட்ட பின்னர் கூட வெளிநாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களான வி~யந்துகளுக்கு புலிகள் வழங்கிய பொய்யான பிரச்சாரம் தந்திரோபாயமான பின்வாங்கல் என்பதே.

அதுமட்டுமல்ல இராணுவம் அகலக்கால் வைக்கிறது. தலைவர் திட்டம் வைத்திருக்கின்றார் உள்ள வரவிட்டு தாக்குவார் என்று சொல்லி வழமையான மாயைக்குள் தமது ஆதரவாளர்களை வைத்திருந்தனர். ஆனால் இராணுவம் மன்னார், மடு என்று சென்றபோது மடு மாதா சுருபத்தை பாதுகாப்பு காரணமாக எடுத்துச் சென்றது என்று கூறி உலக சிறிஸ்தவ மக்களின் அனுதாபத்தை, ஆதரவை தங்கள் பக்கம் தங்களுக்கு சார்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி கண்டனர்.

மக்களையும் அங்கிருந்து இடம் பெயரச்செய்து காடுகளிலும், மரநிழல்களிலும் வெய்யிலிலும், மழையிலும் துன்புற விட்டுச் சென்ற பொழுதும் கூட புலிகளின் தோல்வியை வெளிநாட்டு புலி பினாமிகள் தமிழ் நாட்டின் சில புலி மற்றும் பிழைப்பு அரசியல்வாதிகள், திரைப்படக் கலைஞர்கள் போன்றோருக்கு பணத்தை கொடுத்து இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற போர்வையில் புலிப் பாதுகாப்பு போராட்டங்களை நடத்த வைத்து மக்களை ஒரு கதகதப்பான நிலையில் வைத்துக்கொண்டு போராட்டத்தின் பெயரால் தங்களுக்கான பணவருவாய் சுகபோக வாழ்வையுமே தககவைத்துக் கொண்டனர்.

இலங்கை இராணுவம் மடுவிலிருந்து புதுக்குடியிருப்பு வரை புலிகளின் பாதுகாப்பு அரண்களை தகர்த்தவாறு குளியல் தொட்டி, குளிர்பானப் பெட்டி, மதுப்புட்டி, குளிரூட்டி, மெத்தைக்கட்டில் என மக்களின் பணத்தில் விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வாழ்ந்து வந்த பிரபாகரனின் சுகபோக நிலக்கீழ் பங்களாக்களை கைப்பற்றியதோடு புலிகளின் இராணுவ நிலைகள், தளபாடங்கள், பதுக்கிவைத்த உணவுப் பொருட்கள், மருந்துப்பொருட்கள், எரிபொருட்கள், என்பவற்றுடன் அழிவு ஆயுதங்கள் செய்யும் இயந்திர நிலையங்களையும் கைப்பற்றி சிறுபகுதிக்;குள் மடக்கிய பின்பும் தங்களின் தோல்வி, இயலாமையை ஏற்றுக்கொள்ளத புலிகள் மக்களை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு தாம் தப்பிக்கொள்ள மக்களை பாதுகாப்பு கேடயமாக்கி அவர்களின் அழிவைக் கூட்டி உலகநாடுகளுக்கு காட்டி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவந்து தம்மை சுதாகரித்து கொண்டு தமது பாஸிச அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட பெருமுயற்சி செய்து வருகின்றார்கள்.

சிறுவர்களை பலாத்காரமாக பிடித்து சண்டைக்கு அனுப்பி பல ஆயிரம் பேரை பலிகொடுத்த தொடர்ந்து பலிகொடுக்கும் புலிகள் யதார்த்தநிலமையை புரிந்துகொண்டு தமது மக்கள் நலனுக்காக விட்டுக்கொடுக்கவோ, ஒத்துப்போகவோ வராமை மேலும் தமிழ் மக்களின் பாரிய அழிவுக்கே வழிவகுக்கும்.

பிரபாகரனின் சிந்தனைத் தெளிவற்ற செயலே புலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பில் இலக்குத்தவறி நடாத்திய தற்கொலைத்தாக்குதல்கள். ஜ.நா.சபையின் உச்ச அதிகாரியான ஜோன்ஸ் கோம்ஸ் என்பவர் கொழும்பில் இருந்த வேளையில் நடத்திய தாக்குதல் மூலம் தமது அமைப்பு ஒருபயங்கரவாத அமைப்பு என்பதை நிருபீத்துக் காட்டியதுடன் சுவிற்சர்லாந்தில் ஜெனிவா ஜ.நா.சபைக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்டு தமிழீழத்தை ஆதரிக்கக் கோரியும் தங்கள் தலைவன் பிரபகரன் என்றும் கோசமிட்டு அல்லல்லுறம் மக்களின் பெயரால் ஆர்பாட்டம் நடத்திய புலிப் பினாமிகளின் முகத்திரைகளை கிழித்து தாங்கள் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் தான் என்று நிரூபித்த பெருமை பிரபாகரனையே சாரும்.

சர்வதேச நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களால் நடாத்தப்படும் மாவீரர் தின உரையானது தன் பக்கம் இருக்கக்கூடிய இராஜதந்திரமோ, அரசியல் ஞானமோ, தமிழ் மக்களின் சுயசிர்ணய உரிமைக்கு ஆதரவை திரட்டக்கூடிய எந்த நிகழ்வும் இருப்பது கிடையாது. மாவட்ட ரீதியான பேச்சப் போட்டியில் வல்வெட்டித்துறை மகாவித்தியாலய மூன்றாம் வகுப்பு மாணவன் பார்த்து வாசிப்பு போட்டியில் வேலுப்பிள்ளை பிரபாகரன் முதலாம் இடம் ஆனால் இலங்கை வன்னி தமிழ் மக்களோ முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு மிருகங்கள் போன்று வெளிநாட்டு இராஜயதந்திரிகளும் உள்நாட்டு அரசு மந்திரிகளும் பார்த்து செல்லும் ஒரு மனித மிருகக்காட்சி சாலையாக்கிய பெருமை எந்த அரசியல் சிந்தனையும் இல்லாத பிபாகரனையே சாரும்.

முட்டக்களப்பில் இராணுவ தாக்குதலின் போது அடிவாங்கி பின்வாங்கிய புலிகள் மக்களை அநாதரவாக விட்டு வன்னிக்கு சென்றனர். இக்காலகட்டத்தில் இராணுவ அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த தமிழ் மக்களை காப்பாற்றவோ துயர் துடைக்கவோ புலம் பெயர் நாட்டில் உள்ள புலிகளின் பினாமிகள் எவருமோ ஊர்வலம் நடத்தவோ ஆதரவுக் குரல் கொடுக்கவோ முன்வரதாவர்கள் இன்று வன்னியில் புதுக்குடியிருப்பில் பிரபாகரனின் தலைபோகப்போகிறது என்ற காரணத்திற்காக ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் நடத்தி அந்த துன்பியல் நிகழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

பிரபாகரனின் வாழ்வின் முடிவும் இலங்கை தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு துன்பியல் நிகழ்வே. சர்வதேச பயங்கரவாதத்தை வேரறுத்து, மனித சுதந்திரத்தை வானத்தின் நட்சத்திரங்களாக பிரகாசிக்க செய்வோம்.. VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com