Monday, March 16, 2009

திருக்கோவில் ஸ்ரீ சித்ரவேலாயுத கோவில் ராஜகோபுர நிதிக்காக நர்த்தனாஞ்சலி.



நேற்றும், நேற்றுமுன்தினமும் (மார்ச் 14, 15) தம்பிலுவில் மத்திய மாகவித்தியாலயத்தில் திருக்கோவில் ஸ்ரீ சித்ரவேலாயுத கோவில் ராஜகோபுர நிதிக்காக நடராஜா நர்த்தனாலயத்தினரின் அனுசரணையுடன் நர்த்தனாஞ்சலி இடம் பெற்றது.

மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து திருமதி. ராஜகுமாரி சிதம்பரம் அவர்களின் வரவேற்புரை, திருக்கோவில், திருஞானவாணி முத்தமிழ் இசைமன்றத் தலவர் திரு. கணேசலிங்கம் அவர்களின் தலைமை உரை என்பவற்றுடன் புஸ்பாஞ்சலி, தோடயமங்களம், கௌவத்துடன்பதம், றபான் நடனம், நடேச வந்தனம், மலைக்குறவாசி நடனம், திருத்தாண்டவம், கிராமிய நடனம், மயில் நடனம், கொலு நடனம், காவடிச்சிந்து, சுளகு நடனம், தில்லானா, மங்களம் ஆகிய நிகழ்சிகள் இடம்பெற்றன.

இவ் இருநாள் நிகழ்வுகளில் பிரதம அதிதிகளாக திருமதி. உஷா கனகசுந்தரம், திருமதி. பாலாம்பிகை ராஜேஸ்வரன் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக ஜனாதிபதிக்கான அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. இனியபாரதி, ஆலயடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. குணாளன், அக்கரைப்பற்று வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப். யு.எல்.எம். ஹாசிம், திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. கணேசமூர்த்தி ஆகியோர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் மூலம் திருக்கோவில் ஸ்ரீ சித்ரவேலாயுத கோவில் ராஜகோபுர நிதிக்காக ஒரு தொகை பணம் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நற்பணிக்கு உதவி புரிய விரும்பும் அன்பர்கள் கீழே தரப்பட்டுள்ள வங்கிக்கணக்கிற்கு உங்கள் நன்கொடைகளை கொடுத்துதவுமாறு வேண்டப்படுகின்றனர்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com