ஜப்பான், பிரான்ஸ், மாலை, இந்தோனேஷியா, கொரியா வவுனியா நிவாரண கிராமங்களுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் விஜயம்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று நேற்று (4) விஜயம் மேற் கொண்டது. இவர்கள் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்கள் மற்றும் ஆஸ்பத்திரி என்பவற் றுக்குச் சென்று மக்களை சந்தித்து நலன் விசாரித்ததோடு அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்ததாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விசேட விமானம் மூலம் இவர்கள் வவுனியாவுக்கு விஜயம் செய்தனர். இவர்க ளிடையே பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனே ஷியா மற்றும் மாலைதீவு நாட்டு தூதுவர்களும் வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹனவும் அடங்குவர். இவர்கள் மெனிக்பாம், காமினி வித்தியாலயம், காதிர்காமர் கிராமம் மற்றும் வவுனியா ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று அங்குள்ள மக்களினதும் நோயாளிகளினதும் நிலைமைகளை அவதானித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடியதோடு அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள வசதிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
வெளிநாட்டு தூதுவர்களின் விஜயத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.
0 comments :
Post a Comment