புலிகளின் மேலுமோர் வியூகம் முறியடிக்கப்பட்டுள்ளது.
வன்னி களமுனையியே ஒர் மாற்றத்தை கொண்டுவர துடிக்கும் புலிகள் தற்கொலைத் தாக்குதல்களையே நம்பியுள்ளனர். முன்னணி நிலைகளில் வகை தொகையில்லாமல் தற்கொலைத் தாக்குதல் நாடாத்திவரும் புலிகளின் வியூகம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. நேற்று மாலை புதுக்குடியிருப்பின் மேற்கே கொமாண்டோ படையணியினர் நிலைகொண்டுள்ள பிரதேசமொன்றினுள் இராணுவச் சீருடையணிந்து ஊடுருவித் தாக்குதல் நாடாத்த முற்பட்ட தற்கொலை தாரியொருவர் இலக்கை அடையுமுன்பே தன்னை வெடிக்க வைத்துக் கொண்டுள்ளார்.
களமுனையில் மிகவும் அவதானமாகவும் தயார் நிலையிலும் இருந்த படையினர் இராணுவச் சார்ஜன் ஒருவரின் உடையை ஒத்த உடையில் ..உள்ளே வந்து கொண்டிருந்த நபரை அவதானித்துடன் அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை கைகளை உயர்த்துமாறு பணித்த போது அவர் தனது உடலில் கட்டப்பட்டிருந்த குண்டை வெடிக்க வைத்துக்கொண்டுள்ளார். 50-75 மீற்றர் தொலைவில் வைத்தே தற்கொலைதாரியை படையினர் இனம் கண்டு கொண்டதனால் ஒரு படையினருக்கேனும் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைநெற் நிருபர்.
0 comments :
Post a Comment