Tuesday, March 31, 2009

வர்ஷா கொலைச் சந்தேக நபர்களில் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.



இரண்டாம் இணைப்பு

இன்று திருகோணமலை கிண்னியா பிரதேசத்தில் பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் திருமலைச் சிறுமி வர்ஷாவின் படுபாதக கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ரிஎம்பிபி அமைப்பைச் சேர்ந்த மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் இதுபற்றி தெரியவருவதாவது சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் உப்புவெளி பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி ஒன்றை மீட்பதற்காக பொலிஸார் சந்தேக நபர்களுடன் சென்றுள்ளனர். குறிப்பிட்ட பிரதேசத்தில் சோதனை செய்து தற்கொலை அங்கியை மீட்டுக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ்வண்டி மீது புலிகள் மறைந்திருந்து தாக்கியதில் பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில் சந்கே நபர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் உதவி பொலிஸ் பரிட்சகர் ஒருவரும் சார்ஜன்ட ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட இருவரும் ரிஎம்விபி உறுப்பினர்கள் எனவும் அவர்களில் கொல்லப்பட்டுள்ள பாண்டியன் என்பவர் சில காலங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட திருமலை மாவட்ட பிரசேசெயலரின் கொலையுடனும் தொடர்பு பட்டிருந்தார் என்பது விசாரணைகளில் இருந்து வெளியாகி இருந்ததாக விசாரணைகளை சிறப்பாக மேற்கொண்டுவரும் திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com