அக்கரைப்பற்றில் புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை.
இன்று காலை அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டை ஒன்றை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமான இளைஞர் ஒருவரை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது இளைஞர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் சார்ஜன்ட ஒருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் குறிப்பிட்ட இளைஞர் உரியிளந்துள்ளார்.
குறிப்பிட்ட இளைஞன் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர் என படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர் அவரது உடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இலங்கைநெற் நிருபர்
0 comments :
Post a Comment