இலங்கையில் இந்தியப் படையினர் வைத்தியசாலைகளை அமைக்கவுள்ளனர்.
வன்னிப்போர் முனையிலே காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்கையளிக்க இந்திய படையினர் புல்மோட்டைப்பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு இலங்கை கடற்படையினரினால் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
மேற்படி வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தை சேர்ந்த வைத்தியர்கள் தாதிகள் என 52 பேருடன் மேலதிகமாக 5 விசேட நிபுணர்களும் கடமையில் அமர்த்தப்படுவர். மேற்படி வைத்தியசாலையின் மருந்துச் செலவினங்களுக்கு மாத்திரம் இந்திய அரசு 5 கோடி ரூபா செலவிட முன்வந்துள்ளதுடன் ஐஎல் 76 ரக இரு இலகு விமானங்களை நேரடியாக வைத்திய சேவையிலும் மருந்து பொருட்களுக்கான விநியோகத்திற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இவ்விமானங்கள் வைத்தியர்கள் தாதியர்களின் போக்குவரத்திற்கும் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வெளியிடங்களுக்கு செல்ல நேரின் தேவைக்கேற்ப பயன்படும் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment