நானே கருணாவிற்கு ஜனாதிபதியையும் பாதுகாப்பமைச்சின் செயலர் கொத்தாபாய ராஜபக்சவையும் அறிமுகப்படுத்தினேன் என்கின்றார் பிள்ளையான்.
எமது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் ஓர் அங்கம் எனவும் நான் அரசாங்கத்துடன் எந்த ஒருகாலகட்டத்திலும் முரன்படமாட்டேன் என்றும் எமது கட்சி மஹிந்த அரசுக்கு பூரண ஆதரவு வழங்கும் எனவும் தென்பகுதி சிங்கள மக்களுக்கு உறுதியளிப்பதாக இன்றைய சண்டே ஒப்சேவர் எனும் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
மேலும், நானே அரசுடன் இணைந்து சகல செயற்பாடுகளையும் செய்து வந்தேன் என்றும் கருணாவிற்கு அரச தலைவர் மஹிந்தவிற்கும் அவரது சகோதரர் கோத்தாபாய விற்கும் நானே கருணாவை அறிமுகம் செய்து வைத்தேன் என்றும் தான் தமிழ் மக்கள் தமது இயக்கத்தில் பெயரில் உள்ள "புலிகள்" எனும் பதத்தை கழற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment