தங்கவேலாயுதபுரம் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு
அம்பாறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குஞ்சிகுடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தேடுதல் மேற்கொண்ட அதிரடிப் படையினர் ரி56 ரக துப்பாக்கி ரவை பெட்டிகள் 26, ரிஎன்ரி வெடிமருந்த நிரப்பிய கலன் ஒன்று, ஆர்பிஜி குண்டுகள் 02, மிதிவெடிகள் 77, கிளேமோர் குண்டு 1 என்பவற்றை கண்டு பிடித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் புலிகள் புதைத்து வைத்துச் சென்ற ஆயுதங்கள் இவ்வாறு தொடர்ந்து மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment