குண்டுதாரி என்னுடன் தங்கியிருந்தார்
கொடப்பிட்டிய தற்கொலைத் தாக்குதல் விசாரணையில் பிச்சைக்கார சிறுவன் தெரிவிப்பு
அக்குரஸ்ஸ கொடப்பிட்டிய மீலாத் தின விழாவின் போது குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசார ணையில் குண்டுதாரி தன்னுடன் தங்கியிருந்தாரென்று பிச்சைக்கார சிறுவனொருவன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
மாத்தறையிலுள்ள ஸ்ரீ மதுர கட்டடத்தில் பிச்சைக்காரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் தங்கியிருக்கும் நான், பத்திரிகையில் குண்டுதாரியின் புகைப்படத்தை பார்த்ததும், நான் அவனை அடையாளம் கண்டு கொண்டு விட்டேன் என்றும் 13 வயது சிறுவன் கூறியுள்ளான்.
இவர் நன்கு சிங்களம் பேசக்கூடியவர். மாத்தறையி லுள்ள இராணுவ முகாம் மஹாநாம பாலம் என்ப வற்றையும் அடிக்கடி பார்த்து வந்தார். எனது வீட்டில் நான் கோபித்துக் கொண்டு வந்தே இவர்களுடன் சேர்ந்து பிச்சை எடுத்தேன். குண்டுதாரிக்கு புஷ்பகுமார் என்ற நண்பர் ஒருவர் இருந்தார்.
இருவரின் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் ஏற்ப ட்டது. எனினும் அவர்களிருவரும் வெலிகமை பகுதிக்கு பிச்சை எடுக்கச் சென்ற போது நானும் அவர்களுடன் சென்றேன்.
0 comments :
Post a Comment