Friday, March 13, 2009

பிரித்தானிய பாதுகாப்பமைச்சின் செயலர் ஜனாதிபதியை சந்தித்தார்.



பிரித்தானிய பாதுகாப்பமைச்சின் செயலர் கலாநிதி Liam Fox அவர்கள் ஜனாதிபதியை இன்று அலறி மாளிகையில் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் அமைச்சர் றோஹித போகல்லாகம, பா.உ பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கா, வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் செயலர் கலாநிதி பாலித ஹோகன்ன ஆகியயோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின்போது வடக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நாடாத்தப்பட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் நிர்வாகப்பொறுப்பு வழங்கப்படுமெனவும் வடக்கு முற்றாக அபிவிருத்தி செய்யப்படுமெனவும் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.

திரு Liam Fox பொக்ஸ் அவர்கள் எதிர்கட்சி உட்பட பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment