முல்லைத்தீவுக் கடலில் கப்பல் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. (திருத்தம் )
வன்னி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டுசென்ற எம்வி பின்ரான் எனும் கப்பல் புலிகளின் ஆட்லறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நேற்று (முன்தினம் மார்ச் 07) பிற்பகல் 4.15 மணியளவில் திருகோணமலை துறைமுகத்திலிருந்து 500 மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் நேற்று (மார்ச் 08) காலை 7.30 புதுமாத்தளன் கரையோரத்தை அடைந்திருந்தது.
கப்பல் கப்டனின் தகவலின் பிரகாரம் 142 மெற்றிக்தொன் பொருட்களை கப்பலிலிருந்து இறக்கியிருந்த நிலையில் இன்று காலை (மார்ச் 09) 8.30 மணியளவில் புலிகள் கப்பலை நோக்கி மேற்கொண்ட சரமாரியான ஆட்லறித் தாக்குதலில் சேதமடைந்த கப்பல் உடன டியாக பாதுகாப்பான முறையில் ஆழ்கடல் பரப்பை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டதாக தெரியவருகின்றது. (திருத்தம்)
வன்னியில் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என பிரச்சாரம் செய்துவரும் புலிகள் வன்னி மக்களுக்கான அத்தியாவசிய வழங்கல் பொருட்கள் அடங்கிய கப்பலைத் தாக்கியுள்ளதை வன்னியில் நிலைகொண்டுள்ள சர்வதேச அமைப்புக்கள் கண்டித்துள்ளது.
0 comments :
Post a Comment