Saturday, March 28, 2009

வணங்கா மண். கடுகதி சேவை. – அ.விஜயகுமார்-

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஒரு கப்பல் போக வேண்டுமானால். முதலில் கப்பல்
கம்பனிகளை தொடர்பு கொண்டு. செல்ல இருக்கும் நாடு, என்ன பொருள் கொண்டு போகப் போகின்றோம். எத்தனை மெட்டிக் டண் கொண்டு போகப் போகின்றோம் என்று சொல்லி
அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும். அவர்கள் தங்களது கப்பல் சேவை அப்பகுதிக்கு உண்டு எனில் எத்தனை டண் பொருள்,பெல்லட் (ஆறு அடி நீளம்.அகலம்.உயரம்) களில் அடைக்கப் பட்டதா.அல்லது கன்டய்னர்களில் (20 அடி)அடைக்கப் பட்டதா அல்லது 'பல்க்'(குவியலாக)ஆகவா. எந்த துறை முகத்தில் பொருளை தருவீர்கள்.அப்பொருளை எந்த துறை முகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கேள்விக் கொத்து அனுப்புவார்கள்.

இவைகளுக்கு அதி குறைந்தது இரண்டு வாரம் எடுக்கும். ஏற்றுமதிக்கட்டணம் பேசப்படும். ஒரு வழிப்பாதை என்றால். அதாவது வரும் போது வெற்றுக் கப்பல்தான் திரும்பிவர வேண்டுமானால் கட்டணம் இரட்டிப்பாக இருக்கும். சில கப்பல் கம்பனிகளுக்கு அந்த குறிப்பிட்ட நாடுகளில் முகவர்கள் இருப்பார்கள். இங்கிருந்து புறப்படுவதற்கு ஒரு மாதம் முன்னரே தமது முகவருக்கு அறிவிப்பார்கள். நாங்கள் 21 நாட்களில் கொழும்பு துறை முகம் வருகின்றோம். யாராவது இங்கிலாந்துக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமானால் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். எங்களது கப்பலில் ஏற்ற முடியும் என அறிவிப்பார்கள்.

அதே நேரம் கொழும்புத்துறை முகத்தை தொடர்பு கொண்டு தமது கப்பல் பற்றிய சகல விபரங்களையும் ( கப்பலின் நீள அகலம், கொள்ளளவு, நிறம், என்ன கொடி பறக்கவிடப் பட்டிருக்கும், எத்தனை ஊழியர், எத்தனை கெப்டன் என்பது முதல் அதற்குள் அமைந்துள்ள கிச்சன் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது வரை) அனுப்பி. நாங்கள் வரும் போது உங்கள் துறைமுகத்தில் எங்கள் கப்பலை நிறுத்த இடவசதி உண்டா இல்லாவிடின் எத்தனை நாட்களில் இதை ஏற்படுத்தி தருவீர்கள் என 'துறைமுக மாஸ்டருக்கு' பக்கம் பக்கமாக பெக்ஸ் அனுப்பு வார்கள்.

அங்கிருந்து வரலாம். நீங்கள் தரித்து நிற்பதற்கு இவ்வளவு கட்டணம் அறவிடுவோம். மேலதிகமாக தரித்து நிற்பதற்கு மேலதிக கட்டணம் இரட்டிப்பாக அறவிடுவோம் என பதில்வரும். இல்லை இப்போது இடமில்லை என்றால் இங்கிலாந்தில் துறைமுகத்தில் இருந்து நங்கூரத்தையே எடுக்க மாட்டார்கள்.

சாதாரணமாக இங்கிலாந்தில் இருந்து சிறிலங்கா செல்ல 14 நாட்கள் தொடக்கம் 21 நாட்கள் எடுக்கும். கடல் கொந்தளிப்பு, கடல் காற்றின் திசை மாற்றங்களை தீர்மானித்து நாட்கள் வேறுபடும்.

வணங்கா மண் புறப்பட்டு வன்னிக் கரைக்கு 600 கடல் மைல் பரப்புக்கப்பால் நிற்க வேண்டும். மோட்டுச்சிங்களவன் மாதிரி ஒரு மோட்டு வெள்ளையன் ஒத்துக் கொண்டால்.
வணங்காமண் கொழும்பு செல்ல போவதில்லை. எனவே கட்டணம் இரட்டிப்பு. சரி. வன்னிக் கடலில் நிற்க ஒவ்வொரு நிமிடத்திற்கும் கப்பல் கம்பனி பணம் அறவிடும். அப்படி வைத்துக் கொள்வோம். பணமும் தயார்.

மக்களிடம் அடித்து சத்தியம் பண்ணியாயிற்று. 29ம் திகதி கப்பல் புறப்படும். ஐரோப்பிய மக்களை நினைத்தால்தான் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. ஹோட்டலுக்கு சாப்பிட போனல் உப்பில்லை, புளியில்லை எனவும், பாருக்கு தண்ணி அடிக்கப் போனால் போத்தலை குலுக்கிப் பார்த்துவிட்டும் பேரம் பேசும் மக்கள் துறைமுகமில்லாத, இன்னுமே முற்பதிவு செய்யாத ஒரு கற்பனைக் காகித கப்பலுக்கு தேரோட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றனர். வாழ்க தமிழீழம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com