Saturday, March 28, 2009

புலிகளின் குறிபார்த்துச் சுடும் படையணியின் துப்பாக்கிப் பிரயோகத்தில் யுத்த சூனியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் பலி.

இலங்கை அரசாங்கம் பொதுமக்களுக்காக ஒதுக்கியுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தில் புலிகள் தமிழ் பெண்ணொருவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இக் கொலை பற்றி தெரியவருவதாவது, டெஸி என அழைப்படும் இப்பெண் புலிகளின் குறிபார்த்து சுடும் பிரிவினரிலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவரது குடும்பம் வன்னியில் புலிகளின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்த காரணத்தால் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்கள் தமது பிள்ளைகளை புலிகளின் அனுமதியில்லாமல் வன்னிப் பிரதேசத்திற்க வெளியே அனுப்பியமையால் இவரது கணவர் 6 மாத காலம் புலிகளின் முன்னரங்குகளில் பங்கர்களுக்கு மண்சுமக்க நேரிட்டிருந்த நிலையில் யுத்த சூனியப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்திருந்த டெஸி புலிகள் அங்கு சென்று மக்களுக்கு துன்பம் கொடுக்கையில் அவர்களுடன் பலமுறை தர்க்கம் புரிந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 24ம் திகதி மார்ச் மாதம் இவர் புலிகளின் குறிபார்த்து சுடும் பிரிவினரால் தொலைவில் இருந்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment