Saturday, March 21, 2009

நர ப(பு)லிகளால் தமிழீழம் பிறக்குமா? -கிழக்கான் ஆதம்-



நீ உன் எதிரியுடன் சாமாதானம் செய்ய விரும்பினால் அவனுடன் சேர்ந்து அர்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். அப்போது அவன் உன்னுடன் பங்காளியாவான்.-நெல்சன் மன்டேலா -

மானிட வர்கம் நாகரீகங்கள் வளர்ச்சி அடைந்த போது சமூகங்களாக வாழப் பலகிக்கொண்டார்கள் மனிதர்கள். அந்த வளர்சியே பல நூறு ஆண்டுகளில் மொழியின் தொற்றம், பண்டமாற்று, பணத் தோற்றம் என வளர்ந்த போது சமூகங்களின் நலனைப் பேன மற்றும் அந்தச் சமூகத்தின் பாதுகாப்புக்கு என மனித உரிமைகள், தனி நபர் உரிமை இறைமை என பற்பல சொற்பதங்கள் தோற்றம் பெற்றன. அதற்கான அமைப்புக்களும் உலகளவில் தோற்றம் பெற்று மனிதர்களை மனிதர்களிடம்(சொன்னால் வெட்கம்) இருந்து காக்கப் பாடுபட்டு வருகின்றன.

இந்த அமைப்புக்களின் தோற்றத்திற்கு முதற்காரணம் அன்றிருந்த ஆண்டான் அடிமை சமூக அமைப்பாகும். அங்கு மனிதர்கள் சக மனிதர்களால் மிருகங்களை விட மோசமாக நடத்தப்பட்டதாகவும். அவர்கள் பலியிடப் படும் நர பலிகளாக பாவிக்கப்பட்டதாகும் என்பதை வரலாற்றில் காணலாம்.ஆனால் நவீன நரபலி நாயகர்கள் இரத்தம் குடிக்கும் காட்டெரிகள் என நம் கண்முன்னால் இந்த இருபத்தி ஓறாம் நூற்றாண்டில் காணக் கிடைத்தது நான் செய்த துரதிஷ்டமே எனலாம்.

இலங்கை இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கூட இலங்கை மற்றும் இந்தியாவை முழுக் கட்டுப்பாட்டில் ஆட்சிபுரிந்து வந்த காலனித்துவ ஆட்சியாளர்கள் கூட ஒரு நாயை கொல்வதானாலும் எங்களுக்கு சட்ட ரீதியான அனுமதி வேண்டும் என்றனர்.
ஆனால் நவ சர்வதிகார நாயனும் தோழர்களும் நடத்தும் உரிமைப் போரில் தங்களை பாதுகாக்கும் கேடயங்களாக சொந்த இரத்த உறவுகள் களத்தில் பலியிடப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை.

உலகையெல்லாம் உலுக்கிய ஆஸ்திரியாவில் பிறந்த அடோல்ப் கிட்லர் தனது இன அழிப்பு மூலம் பதினேலு மில்லியன் சாதாரண மக்களை கொன்றான் ஆறு மில்லியன் யூதர்கள் அடங்களாக. இவ்வழிப்பில் அவன் அவனது இனத்தைச் சார்ந்த அல்லது அவனது விசுவாசிகள் யாரையும் அழிவுக்குட்படுத்த வில்லை என்பதையே வரலாற்று காட்டுகின்றது.

ஆனால் சொந்த மக்கள் தன்னை மட்டுமே இந்த உலகில் நம்பி தனது விசுவாசிகளாக தங்கள் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமூகத்தை தனது சொந்த சுயலாபத்திற்காக அழித்தொழிக்கும் பெருமைக்குரியவர் நமது புலிகளின் தேசிய தலைவர் என்றால் அது மிகையல்ல.

இப்படியாகப்பட்ட கொடுமை உலகில் எந்த யுத்த்திற்கு உள்ளாகப்பட்ட நாட்டிலும் நடந்ததில்லை. மட்டுமல்லாது நமது தமிழ் சினிமாக்களில் கூட இப்படியான ஒரு கதை எழுதப்பட்டு படமாக்கப் பட்டதில்லை. சினிமாக்களில் கூட தன்னைச் சார்ந்த மக்களுக்கு ஆபத்து என்றால் உடனே ஹிரோ வில்லனிடம் சரண்டராகி மக்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி பின்னர் வில்லனிடமிருந்து தப்பி வில்லனை அழிப்பார். அப்படியே இதுவரை கற்பனை கதைகள் கூட உருவாக்கப் பட்டிருந்தன.

ஆனால் நம் ஈழத்திலோ நிலமை தலை கீழாக உள்ளது அந்த மக்களின் ஹீரோ அவர்களின் உயிரைக் கொடுத்து தன்னை பாதுகாக்குமாறு மக்களை பலிக்கடாக்கலாக சிறை பிடித்து வைத்துள்ளார். தமிழ் சமூகத்தின் விடுதலை தனி நாடு என்று அவர்கள் போட்ட கோஷத்திற்றாக உண்மையான பொருள் என்ன என்று அந்த மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்கள். அது இந்த உலகில் இருந்து அந்த மக்களுக்கு விடுதலை என்றும் அடுத்த உலகில் தலைவருடன் தனி நாடு என்றும்.

ஒரு சமூகத்திற்கான விடுதலைப் போராட்டம் எவ்வாறு அமைய வேண்டும் அது எதுவரை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கெல்லாம் உலக போராட்ட இயக்கம்கள் அதன் வெற்றி பெற்ற மற்றும் தொல்வியடைந்த தலைவர்கள் ஒரு முன்மாதியான நடைமுறையினைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்பதை அந்த போராட்ட இயக்கம்களின் வரலாற்றை படிப்போருக்கு புரியும். தங்களின் சொந்த மக்களின் இருப்பு அவர்களின் உயிர் கேள்விக் குறியாகும் போது அவர்கள் உடனே தங்கள் போராட்ட பாதையை மாற்றிக் கொண்டு தங்கள் மக்களைப் பாதுகாத்த வரலாற்றையே நாம் காண முடிகிறது.

1964ம் ஆண்டு சுதந்திர பலஸ்தீனத்தை ஆயுத போராட்டதின் மூலம் பெற்றுக் கொள்வதென அரப் லீக் தீர்மானத்திற்கு ஏற்ப யாஸீர் அறபாத் தலைமையில் அமைக்கப்பட்ட பலஸ்தீன விடுதலை இயக்கம் தனது பாதையை தங்களின் மக்களின் உயிரிலப்பை தவிர்பதற்காகவும் அவர்களின் ஒருவேலைக் கஞ்சிக்காயினும் வழி செய்ய நினைத்தும் தங்கள் போராட்ட பாதையை மாற்றிக் கொண்டது. ஆயுதமேந்திய தலைவர் கையில் ஒலிப் மரத்தின் இலையுடன் ஐக்கிய நாடுகள் சபையில் பிரவேசித்து தங்களது சுதந்திர தேசத்திற்கான அடிக்கல்லை நாட்டி அந்த மக்களை பாதுகாத்தார்.

ஆனால் நமது இனத்தின்தேசிய தலைவராக தனக்கு தானே மகுடன் சூட்டிக்கொண்டவரோ பதுங்கு குழியை விட்டு வெளியே இதுவரை வரவில்லை அதனாலவோ என்னவோ அவருக்கு உலக நடை முறையும் புரியவில்லை. இந்த இயக்கத்தின் இத்தகைய தான்தொன்றித் தனமான செயற்பாடானது உலகில் எந்த இடத்தையும் புலிகளுக்கோ அல்லது அதன் தலைமை பீடத்திற்கோ பெற்றுத் தரப் போவதில்லை உலகின் மிக மோசமான பயங்கர வாத அமைப்பு என்பதைத் தவிர.

புலிகளின் கொடியை தாங்கி புலிப்பிணாமிகள் நடத்தும் ஊர்வலங்களில் அவர்களின் கொடிகளுக்கு கனடிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தற்போது அவர்களின் ஊடகங்கள் பீத்துகின்றன. இதற்கு முதல் தடை விதித்திருந்தார்களா இப்போது அனுமதி வழங்க என்பதை அவர்களிடமே கேளுங்கள். இது எந்த மாதியான சுத்தல் என்பது மிக விரைவில் மக்களுக்கு புரியும்.

இவ்வாறு அவர்கள் அவிட்டுவிடும் வியாக்கியானமானது எதிர் வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகளில் தங்களின் தட்ட பட்டைகளுக்கும் ஆப்புவைத்துவிடுவார்கள் என்ற அச்ச உணர்வுடன் மக்களின் விழிப்புணர்வை நசுக்கி புலிகளின் மேலாதிக் வாதத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டதைப் போன்றதொரு மாயையை ஏற்படுத்துவதாகும்.
மட்டுமல்லாது குனிக் குறுகி குட்டிச் சுவராகியுள்ள புலிப் பிணாமிகளின் வாழ்கை எழில் இனி உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற வேண்டா வேலைக்குள் தங்களை தள்ளி விடும் என்ற சமூக விழிப்புணர்சியுமாகும்.

உலக வரலாற்றில் முதல் முறையாக தலைவரும் சகபாடிகளும் மக்களின் உயிரையும் குடித்து தங்களின் உயிரை உறைக்குள் பத்திரமாக பாதுகாத்துக் கொண்டிருக்க மற்றைய இன்னொரு கூட்டம் அந்த மக்களின் உயிர் பணயத்தைக் காட்டி அவர்கள் சொந்தங்களின் இரத்த்தை உறுஞ்சிக் குடித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேச விடுதலை, போராட்டம் என்ற சிறந்த சொற்பதங்களின் பொருளை வெற்று வேட்டாக ஆக்கிக் காட்டியுள்ள இந்த இரத்தக் காட்டெரிகளின் முகங்கள் அவதியுறும் மக்களின் முன் இன்னும் சில நாட்களில் வெளுத்துவிடும் என்பது திண்ணம்.

ஆயுத போராட்டம் என்பது பெரும்பான்மையிடம் தாங்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளவதற்கான ஒரு மார்க்கம் மட்டுமே இறுதித் தீர்வு அரசியல் தீர்வாகவே அமையும் என கூறி மக்களை பலிகடாவாக்கி விட்டு. இன்று ஆயுதப் போராட்ட மூலமே இறுதி தீர்வு எட்டப்பட வேண்டும் என விரன்டா வாதம் செய்கிறார்கள். ஆயுத போராட்டத்தை மட்டும் முன்னெடுத்த எந்த அமைப்பும் உலக வரலாற்றில் தனது மக்களுக்கு ஒரு பிடி மண்னையேனும் பெற்றுக் கொடுத்ததில்லை.

தனது சொந்த மக்களின் உயிர்களை தங்களது உயிர் காக்கும் கவசமாக பாவிக்கும் புலிகள் அதே மக்களால் விரட்டியடிக்கப் படு தோல்வி அடைந்த ஒரு அமைப்பாக சர்வதேசத்திடம் சரணடையும் காலம் மிக தூரத்தில் இல்லை. சொந்த மக்கள் என்ற தனது எஜமானர்களை அடிமைகளாக நடத்துகின்ற புலிகளின் தற்போதைய சர்வாதிகாரமானது கிட்லர் நடத்திய இன அழிப்பை விட மோசமான ஒரு கண்னோட்டத்தில்தான் உலகினால் நோக்கப்படும்.

விடுதலை பெறுவீர் விரைவா நீர்
வெற்றி கொள்வீர்" என்றுரைத் தெங்கும்
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்,
"சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை;
எடுமி னோஅறப் போரினை என்றான்
எங்கோ மேதகம் ஏந்திய காந்தி! -மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்.

No comments:

Post a Comment