இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கு புளொட் அமைப்பு நிவாரண உதவி..
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்து வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணப்பிரிவு பல்வேறு வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவியளித்துள்ளது. வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களில் பால்மா வகைகள், பழவகைகள், பிஸ்கட் உலருணவுப் பொருட்கள் என்பன அடங்குகின்றன. இதனை புளொட் அமைப்பின் நிவாரணப் பிரிவினர் ஒழுங்குபடுத்தி செவ்வனே பூர்த்தியாக்கியுள்ளனர்.
பூந்தோட்டம் அகதிமுகாம் மக்களுக்கு புளொட் அமைப்பினர் நிவாரண உதவி.
சென்றவாரம் தீக்கிரையாகிய பூந்தோட்டம் அகதி முகாமில் பல்வேறு இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாகி சிரமங்களை எதிர்கொண்டு வந்த மக்களை புளொட் அமைப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தின் போது புளொட் அமைப்பின் நிவாரணப் பிரிவினர் அம்மக்களுக்குரிய உடனடித் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நிவாரண உதவிகளை மேற்கொண்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவியளித்துள்ளது. இதன்போது மக்களோடு மக்களாக கலந்து சேவையாற்றிய புளொட் அமைப்பின் நிவாரணப் பிரிவினரால் அம்மக்கள் உற்சாகமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment