Friday, March 20, 2009

கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு.


புதுக்குடியிருப்புக்கு கிழக்கே புலிகளால் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கடற்புலி முகாம் ஒன்றை கைப்பற்றியுள்ள பாதுகாப்புப் படையினர் அதிலிருந்து சிறிய ரக நீர்மூழ்கி உட்பட அதி நவீன உபகரணங்கள் பலவற்றையும் மீட்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

புதுக்குடியிருப்பில் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களை முற்றாக விடுவிக்கும் நோக்கில் முன்னேறிவரும் இராணுவத்தின் படைப் பிரிவுகள் இதனை கைப்பற்றியுள்ளன.

ஒருவர் மாத்திரம் செல்லக் கூடிய வகையில் இச் சிறிய ரக நீர் மூழ்கி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையிலுள்ள படகுகள் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை, இரணைப் பாலை தென் பகுதியிலிருந்து அதி நவீன தொலைத் தொடர்பு கருவிகள், செய்மதி டிஸ் அன்டனாக்கள், தகவல் பரிமாற்ற கருவிகள் பலவற்றையும் படையினர் கண்டெடுத்துள்ளனர்.

சிறிய ரக நீர் மூழ்கியை வைக்கோல்களால் மறைத்த நிலையில் புலிகள் கைவிட்டுச் சென்றுள்ளனர். அதேவேளை, பல முனைகள் ஊடாக முன்னேறிவரும் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.




No comments:

Post a Comment