இந்தியாவின் மருத்துவ உதவிகளுக்கு இலங்கை பாராட்டு
இலங்கைக்கு ஆக்கப்பூர்வமான பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கி வருவதாக அந்நாடு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது. இலங்கை சென்றுள்ள 52 பேர் கொண்ட இந்திய மருத்துவக் குழுவை, போர் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வழியனுப்பும் நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா கூறியது:
இலங்கை இனப் பிரச்னையை தீர்க்கவும், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கியும் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை இந்தியா செய்து வருகிறது. இதற்கு எங்களது நன்றியையும், பாராட்யையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியா அனுப்பும் மருந்துகள், உரிய முறையில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதை அரசு உறுதிசெய்யும் என்றார். இந்தியாவில் இருந்து 8 மருத்துவ நிபுணர்களும், இதர மருத்துவப் பணியாளர்கள் என 52 பேர் திங்கள்கிழமை கொழும்பு போய் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment