ஆலையடிவேம்பு ஆர்கேஎம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி.
ஆலையடிவேம்பு ஆர்கேஎம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. கடந்த 13 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இடம்பெற்ற பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்பபோட்டியில் மாணவர்கள் மிகவும் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் திரு. இனியபாரதி, ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு. குணாளன், வைத்தியர்களான திரு. தயானந்தராஜா, திருமதி. சித்திரா மற்றும் மாகாணசபை அமைச்சர் நவரட்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment