Tuesday, March 24, 2009

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் இயக்குனர்கள் நாட்டை விட்டு வெளியேறத்தடை. - கொழும்பு நீதிமன்றம்.- (திருத்தம்)



தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் புலிகளுக்கு நிதி திரட்டுகின்றனர் என மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தரவுகளை ஆதாரமாக வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இன்று மேற்படி வழக்கு கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதி மன்றில் ஆஜராகியிராத தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7 இயக்குனர்களுக்கு பிரதான மஜித்திரேட் பிடியாணை பிறப்பித்ததுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் படி சம்பந்தப்பட்ட திணைக்களங்ளுக்கு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் யூன் மாதம் 16ம் ஒத்தி வைத்தார்.

அத்துடன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த அக் கழகத்தின் 8 இயக்குனர்களில் ஒருவரான சின்னையா ராமலிங்கம் அவர்களை 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார். இன்று நீதிமன்றில் ஆஜராகாத ஏனைய 7 இயக்குனர்களில் 5 இயக்குனர்கள் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருக்கின்றனர் எனவும் அவர்களில் இருவர் முறையே 'லெப் கேணல்' , கேணல் தரங்களில் உள்ளதாகவும் தெரியவருகின்றது. (திருத்தம்) இவர்களில் இருவர் பிரித்தானியாவினுள் நுழைந்து தஞ்சம் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.


இலங்கைநெற் கொழும்புச் செய்தியாளர்.



No comments:

Post a Comment