கிழக்கின் தேசியவாத முகமூடி. -கிழக்கான் ஆதம்-
“அனேகமாக எல்லோரிடமும் கெட்ட நடத்தையிருக்கும், ஒருவருடைய குணத்தை பரிசோதிப்பதாயின், அவரிடம் அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்” – ஆப்ரகாம் லிங்கன்-
கிழக்கில் ஒரளவு இரத்தம் சிந்தும் அரசியலுக்கு முடிவு கட்டப் பட்டுள்ளதால் இரத்தம் சிந்தா அரசியலுக்கு தாயாராகி வருகிறார்கள் போராளிகள். அதிகாரப் போட்டியுடன் கிழக்கு மக்களின் வாழ்வு எதிர் காலத்தில் மீண்டும் ஒரு முறை அடகு வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது. பூதங்களுக்கிடையில் நடக்கப் போகும் நாடகத்தில் தங்கள் தரப்பை வெற்றி பெறச் செய்யும் முனைப்பில் அரசு செயற்படுகிறது.
பொம்மைகள் நரிகளின் கூட்டமைப்பில் மேடையேற்றப் பட்டிருக்கும் நாடகம் ஒரு வரையறையில் நிறுத்தி விடப்படும் என்ற செய்தியையே அங்கிருந்து வரும் குருவிகள் சொல்கிறது. அதிகாரப் பெரியவர் ஒரு நடைமுறை அரசியல் வாதி என சர்வாதிகார பீடம் சொன்னதை நிறுவிப்பதைப் போன்றே அடுத்த காய்களும் நிஜ விம்மங்களை வைத்து நகர்தப் படுகிறது.
கருவிகள் களையப் பட்டதும் இன்னும் கருவிகளுக்கு ஆட்சி பீடம் ஆசி வழங்கியதும் புதிய தொரு நடைமுறையாக இருப்பது கிழக்கின் அதிகாரம் யாருக்கு என்பதை பட்டை போட்டுக் காட்டுகிறது.
தனது ஹரோவை எதிர்வரும் காலத்தில் பூரண பாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பும் நாடகக்காரர் தற்போதைய மேடையை தனது சிந்தனையின் எழுத்தோட்டத்திற்கு ஒத்திகை பார்பதாகவே தெரிகிறது.
கிழக்கின் நாகட மேடையில் இரண்டு ஹீரோக்களை ஒரே பாத்திரத்தில் நடிக்க விட்டு தனது புத்திசாலித் தனத்தினால் நாடகத்தை அரங்கேற்றினார் சொந்தக் காரர்.அதில் ஒரு ஹீரோ வேசம் ஒரு பசுவேடமிட்ட நரிக்கும் மற்றது ஒரு வெள்ளாட்டுக்கும் என வழங்கப்பட்டது. நரிவின் வேடம் நாடகம் மேடையேறும் போதே தெரிந்து விட்டதால் தனது குணத்தை மாற்றிக் கொள்ளாது என்பதை நாடகம் அரங்கேரும் போதே பார்வையாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.
இந்த வேசமாற்றமானது நரி எதிர்காலத்தில் மேடையேறுமா பார்வையாளர்கள் அங்கிகரிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வெள்ளாடானது ஹீரோ வேசத்தில் தான் வெளுத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தாலும். தனது எஜமானனை ஒரங்கட்டியதானது அரங்கிலிருந்த பார்வையாளர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறலாம்.
ஆக எஜமானைப் பாதுகாக்க எஜமானியம் கூட்டமைப்பு அதிகமாக கைகொடுப்பதாக தெரிகிறது.
ஆனால் உண்மையில் பார்வையாளர்கள்தான் யார் எந்தப் பாத்திரத்தில் மேடையேற வேண்டும் என்பதை தீர்மானிப் போகிறார்கள். ஆனால் அடுத்த அரங்கேற்றமானது கொஞ்சம் பலமான ஹீரோக்களின் புகழுடன் அரங்கேருவோருக்கே ரசிகர்களைப் பெற்றுத் தரும்.
மட்டுமல்லாது கிழக்கின் புகழ்மிக்க ஹீரோவின் பெயரினாலேயே தற்போது அரங்கில் இருப்பவர் நடித்துக் கொண்டிருக்கிறார். கிழக்கின் தனித்துவமான நாடகக் குழுவிலிருந்து இறுதி நேரத்தில் பிரிந்து சென்ற நரி வேசமிடும் நடிகர் அடுத்த அரங்கில் மேடையேற்றப் படுவதிலிம் கேள்விகளே விடையாக கிடைக்கின்றன.
இப்படி அவரவர் பாத்திரங்களை பாதுகாக்க அவரவர் எடுக்கும் முயற்சிகள் பார்வையாளர்களைத்தான் சலிக்க வைத்துவிடும் எனக் தொன்றுகிறது. ஏற்கனவே பல உதவாத மேடைகளைப் பார்த அவர்களின் வாழ்கையின் கதையை யார் சரியாக எழுதி மேடையேற்றுவார் என்பதே அவர்களின் அங்கலாய்ப்பு
ஒரு சகாப்பத காலம் அவர்களின் வாழ்வில் ஹிட்லரின் கதை பார்த்தே கழிந்து விட்டது ஆகவேதான் நாட்டுக் கூத்துக்கு தற்போது நல்ல மவுசு. கூத்தாடிகள் தங்கள் கதையை அழகாக எழுதி உலகிற்கு வைப்பதன் மூலம் வாழ்கையில் வழி பிறக்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. என்றாலும் களக் கூத்தாடிகளுக்கு முன்னால் சில சவால்களும் முன்னிற்கின்றன.
ஹிட்லர் நாடகம் முடிவடையும் போது கிழக்கின் விடிவுக்கான கதையை எழுத சில வெளிநாட்டு நாடக கம்பனிகளின் அனுசரனையில் இலங்கையின் அதிகாரத் தரப்பு முயலும்.
அப்போது தனித்துவமான நாகக்குழு தற்போது தனித்தே செயற்படுவதால் அவர்களுக்கு பேரம் பேசி அரங்கிற்கு செல்வர். மக்களிடம் அவர்களுக்கு மவுசு இருக்கும். அந்த மவுசானது எதிர் காலத்தில் பல மேடைகளை அவர்களுக்கு வழங்க அதிகமான வாய்புக்கள் உண்டு.
அப்படியான காலம் வரும்போது இப்போது ஹீரோ வேசம் என நினைத்து வில்லன் வேசத்தில் இருப்பவர்களை ரசிகள் ஒதுக்கி விடலாம். இதே நிலமை தற்போதைய மேடையின் காதாநாயகனுக்கும் வரக் கூடும் காரணம் மத்தியில் இருக்கும் கிழக்கின் தர்மகர்தா மத்தியிலேயே நீடிக்காமல் கிழக்கை ஆள நினைத்தால் நிச்சயம் ஹீரோ மேடையிரங்க நேரிடலாம்.
இப்படி இந்த ஹீரோனிசப் போராட்டமும் பணிப்போர் பாணியிலான நடைமுறைகளும் நீடிப்பது மூன்றாம் தரப்பாக நுழைபவர்களை அங்கிகரித்துவிடும் அபாயமும் இருக்கிறது.
ரசிகர்கள் ஹிட்லர் நாடகத்தை வெறுத்துள்ளதால் மேடையேறிய நாட்டுக் கூத்துக் காரர்களும் மக்களின் மனங்களை வெல்வார்களா என்பது கேள்விக் குறிதான்.
நல்ல கதையும் சிறந்த குழுவிருந்தால் மேடையேருங்கள் அந்த தேசிய வாத முகமூடி உங்களுக்கும் பொருந்தும்.
நேற்றை தாங்கிய
குறிப்புகளில்
இன்று
எழுதிய பின்னும்
தெரியாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள் – யாழி –
...............................
0 comments :
Post a Comment