கிறீன் ஓசியன் கப்பலில் பிரசவம்.
அரசினால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள யுத்த தவிர்ப்பு பிரதேசத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் கிறீன் ஓசியன் எனும் கப்பல் மூலம் புல்மோட்டை கொண்டு வரப்படுகின்றனர். அவ்வாறு நேற்று 463 பொதுமக்களுடன் புதுமாத்தளனில் இருந்து புல்மோட்டை நோக்கிப் புறப்பட்ட கப்பலில் இருந்த கர்ப்பிணி மாதொருவருக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளது.
இவ் அவசர பிரசவத்திற்கு கப்பலில் இருந்த கடற்படையினர் உதவி புரிந்துள்ளதுடன் கப்பல் கடற்படைத்தளத்தை அடைந்ததும் கடற்படை மருத்துவக் குழுவினர் உடனடிச் சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் புல்மோட்டையில் நிலைகொண்டுள்ள இந்திய வைத்திய குழுவினரிடம் பாராம் கொடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment