தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எம் வினோதலிங்கம் பல்ட்டி அடித்தார். அரச பாதுகாப்புடன் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம்.
கடந்தவாரம் இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம் வினோதலிங்கம் சிறிலங்கா அரசு புலிகளை பலவீனப்படுத்தி பயங்கரவாதத்தை இந்நாட்டில் முற்றாக ஒழிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கையையிட்டு தான் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் இடைத்தங்கல் முகாம்களில் காணப்படுகின்ற நிலமைகள் குறித்து தெரிவித்துள்ளதாவது, முகாம்களில் சிறு சிறு குறைகள் காணப்பட்டாலும் அம்முகாம்கள் நாடாத்தபடுகின்ற விதம் மற்றும் அங்குள்ள மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி தான் மகிழ்சி அடைவதாகவும் அங்கு இளைஞர் யுவதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொழற்பயிற்சி நிலையம் தொடர்பாக தான் சந்தோசப்படுவதாகவும் அவற்றை இளைஞர் யுவதிகள் தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வரிசையில் செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா ஆகியோரும் சில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இவ்வாறு பல்ட்டி அடிக்கலாம் என உள்ளுர் ஆய்வாளர் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment