வன்னியில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த மக்கள் மீது புலிகள் சுட்டதில் ஒரு வயோதிபப் பெண் பலி!!!
நேற்றுக்காலை யுத்த தவிர்ப்பு பிரதேசமான புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் வயோதிபப் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 9 வள்ளங்களில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்புத்தேடி அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் செல்ல முற்படுகையில் இச்சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து அம்மக்களில் பலர் தமது பயணத்தை கைவிட்டுள்ளனர்.
எது எவ்வாறாயினும் 4 வள்ளங்களில் இருந்த மக்கள் தமது பயணத்தைத் தொடர்ந்து பாலமத்தளன் கரையோரப்பகுதியை வந்தடைந்தவர்களை படையினர் மீட்டுள்ளனர். அவர்கள் வயோதிபப் பெண் உயிரிழந்த விடயத்தை படையினருக்கு தெரிவித்துள்ளனர். அங்கு வந்தடைந்தவர்களில் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த 60 பெண் ஒருவருக்கு படையினர் முதற் சிகிச்சைகளை அளித்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் ஏனையோரை இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கைநெற் வவுனியா நிருபர்
0 comments :
Post a Comment