இந்திய உதவி இல்லாமல் பயங்கரவாதத்தை ஒழிப்பதென்பது கடினான காரியம். -அமச்சர் நிமல் சிறிபால-
இன்று பாராளுமன்றில் இந்திய வைத்தியர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, புல்மோட்டைப் பிரதேசத்தில் இந்திய இராணுவத்தினருக்கு வைத்தியசாலை அமைக்க இடமளித்திருப்பது சிக்கல்களை உருவாக்கும் எனவும் எதற்காக இராணுவ வைத்தியர்கள் அங்கு சேவையில் அமர்த்தப்படவேண்டும்? எனவும் கேள்வியெழுப்பியதுடன் இவ்விடயம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறத்தலாகவும் அமையும் எனவும் கூறியபோது அதற்கு பதிலளித்த சுகாதார சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா,
இவ்விடயத்தில் இரு நாடுகளும் பல தடவைகளில் பேச்சுவார்த்தைகளை நாடாத்தி ஓர் புரிந்துணர்வுடனான ஒப்பந்தத்துடனேயே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு வந்துள்ள வைத்தியர்கள் குழு இலங்கை மருத்துவர்கள் சங்கத்தில் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளார்கள், அவர்கள் இந்திய இராணுவ வைத்தியசாலையை சேர்ந்தவர்களாயினும் இராணுவத்தினர் அல்லர் எனவும் தெரிவித்தார்.
மேலும் அங்கு பேசிய அவர், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது சர்வதேச சமூகத்தினர் இலங்கை மேல் அழுத்தங்களைப் பிரயோகிக்கையில் இந்தியா எமது மலைபோன்ற சக்தியாக இருந்துள்ளது என்றும் இந்தியாவின் உதவி எமக்கு இருந்திருக்காவிட்டால் இவ் யுத்தத்தை இலகுவில் வென்றிருக்க முடியாது எனவும் கூறினார்.
இலங்கைநெற் கொழும்பு நிருபர்
0 comments :
Post a Comment