Monday, March 16, 2009

வெளிநாட்டு படகுகளை கண்காணிக்க ‘ராடர்’ அமைச்சரவை அனுமதி

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டுப் படகுகளை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து ராடர் ஒன்றை தருவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு நேற்று கூறியது. ராடர் கொள்வனவு செய்வது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் பேசி வருவதாகவும் கூடிய விரைவில் ராடரை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இலங்கையில் இருந்து 50 கிலோ மீட்டர் வரையான கடற்பரப்புக்குள் வரும் படகுகள் மற்றும் கப்பல்களை அவதானிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது. ராடர் பொருத்தப்படுவதினூடாக இலங்கை மீனவர்களும் நன்மையடைய உள்ளனர்.

No comments:

Post a Comment