வன்னி மக்களுக்கு யாழில் நான்கு நலன்புரி நிலையங்கள்
புலிகளின் பிடியிலிருந்து தப்பி யாழ். குடாவுக்கு வந்துள்ள மக்களுக்கென யாழ்ப்பாணத்தில் 4 நலன் புரிநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைப் பிரிவு சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவி த்தார். அவர் தொடர்ந்தும் குறிப் பிடுகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக் குரிய மருந்துப் பொருட் கள் யாவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளரின் வவுனியா களஞ் சியசாலைக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருக் கின்றன. இந்த மருந்துப் பொருட்களை புலிகளின் பிடியிலுள்ள மக்களுக்கென தரை வழியாக எடுத்துச் செல்ல முடியாத நிலைமை நிலவு கிறது.
அதன் காரணத்தினால் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கடல் வழியாக அந்த ஆஸ் பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத் திருக்கிறோம் என்றார்.
0 comments :
Post a Comment