Friday, March 13, 2009

வெடி குண்டு நிரப்பிய புலிகளின் லொறி இலக்கை அடைய முன்னர் வெடித்துச் சிதறியுள்ளது.

58ம் படையணியினர் நிலைகொண்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் புகுந்த பாரிய தாக்குதல் நடாத்தும் பொருட்டு புலிகளால் அனுப்பட்ட வெடிகுண்டு நிரப்பிய வாகனம் இலக்கை அடையமுன்னர் வெடித்துச் சிதறியுள்ளது. இவ்வாகனம் முன்னணி நிலைகளில் இருந்து இராணுவத்தினரின் பகுதியினுள் அதிவேகத்தில் நுழைய முற்பட்டதை கண்ட படைச் சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட ஆர்பிஜி தாக்குதலில் இவ்வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது.

மேற்படி வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்ட சிப்பாய் களத்தில் உள்ள ஐரிஎன் தொலைக்காட்சியின் நிருபருக்கு கூறுகையில் தான் முன்னணி அரங்குகளில் நிற்கும் போது இருள் மூண்டிருந்தாகவும் அப்போது தனக்கு எதிர்ப்புறத்தில் உள்ள புலிகளின் நிலைகளுக்கு டிரக்டர் வண்டிகளில் புலியுறுப்பினர்களை கொண்டு இறக்குவதை தான் அவதானித்ததாகவும் அதன் பின்னர் சற்று நேரத்தில் வாகனம் ஒன்று விளக்குகளை அணைத்துக் கொண்டு தமது பகுதியை நோக்கி வேகமாக வருவதை கண்டுகொண்டதுடன் அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு அதன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வாகனம் வெடித்துச் சிதறிய இரண்டு சதுரகிலோ மீற்றர் பிரதேசத்திற்குள் அடங்கிய சகல கட்டிடங்கள் மரங்கள் யாவும் சரிந்து விழுந்துள்ளதாகவும் அவ்வாகனம் வெடித்த இடத்தில் பாரிய கிடங்கொன்று உருவாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாகனத்துடன் படையினர் செறிவாக இருக்கக் கூடிய பிரதேசமொன்றினுள் நுழைந்து வெடித்து படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி அதே நேரத்தில் முன்னரங்குகளையும் கைப்பற்ற முடியும் என்ற எதிர்பார்பிலேயே புலிகள் இப்பாரிய திட்டத்தை வகுத்துள்ளதாகவும் தமது விரர்களின் அவதானம் அத்திட்டத்தை தகர்த்துள்ளதாகவும் களத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குண்டு வெடிப்பு ஏற்படுத்தியிருக்கின்ற சேதத்தைப் பார்க்கின்றபோது அவ்வாகனத்தில் ஆகக்குறைந்தது 350 கிலோ கிராம் வெடிமருந்து நிரப்பியிருக்க வேண்டும் என கூறும் படையினர் குண்டு வெடித்த போது வாகனத்தின் உதிரிப்பாகங்கள் மற்றும் துகள்கள் தமது பங்கர்களின் மேல் வீசப்பட்டிருந்த போதும் தமது வீரர்களில் ஒருவருக்குக்கூட சிறு காயம் தன்னும ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment