பிள்ளையானது கொலை, கொள்ளைக் கலாச்சாரத்தை ஏற்க மறுக்கும் அவ்வியக்க உறுப்பினர்கள் முகாம்களை காலி செய்து வெளியேறுகின்றனர்
திருமலைச் சிறுமி வர்ஷா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்களால் ஆத்திரமடைந்த அவ்வியக்க உறுப்பினர்கள் பலர் இயக்கத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். இன்று காலை கறடியனாறு முகாமிலிருந்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி கருணாவின் காரியாலங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவருகின்றது. இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அவ்வாறு கருணாவின் காரியாலயங்களில் தஞ்சமடைந்துள்ள ஒருதொகை உறுப்பினர்களை படத்தில் காண்கின்றீகள். இவர்கள் தாம் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறியமைக்கான காரணங்களை பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment