இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற வரைக்கும் பேச்சு இல்லை என்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரையும் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று மாலை 6.30 மணிக்கு ஏற்பாடாகி இருந்த இச்சந்திற்பிற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜனாதிபதியின் செயலாளர் அவர்களால் பிரத்தியேக அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
சற்று நேரங்களுக்கு முன்னர் வன்னியில் இடம்பெறுகின்ற யுத்தம் நிறுத்தப்படாதவரை தாம் இச் சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவித்துள்ளர். இருந்த போதிலும் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என ஊர்ஜிதம் அற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment