Thursday, March 26, 2009

புலிகளின் மோட்டார் தொழிற்சாலை படையினர் வசம். 72 அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.



ராமநாதபுரம், விசுவமடு, அம்பகாமம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் படையினர் புலிகளின் குண்டுத் தொழிற்சாலை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். பிரதேசங்களை படையினர் கைப்பற்றியுள்ளபோதும் அங்கு தேடுதல் நாடாத்தி புலிகளின் மறைவிடங்களை கட்டம் கட்டமாக இனம் கண்டுவருகின்றனர். கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்று வரும் தேடுதல்களின் போது பல ஆயுதங்களும் மேலதிகமாக புலிகளின் 72 அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment