Tuesday, March 17, 2009

ஜேர்மன் செஞ்சிலுவை சங்கம் 6 கொள்கலன்கள் அன்பளிப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை களை வழங்கும் வகையில் சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஆறு நடமாடும் கொள்கலன்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமார் 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்கலன்களைக் கையளிக்கும் வைபவம் இன்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாப கார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜகத் அபேசிங்க, தேசிய செயலாளர் எஸ். எச். நிமல் குமார், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அன் றெஸ் லிண்டனர், மொங்கோலிய நாட்டின் பிரதி சுகாதார அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ் வில் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் உரையாற்றுகையில், ஏனைய மக்களைப் போன்று இடம் பெயர்ந்த மக்களும் தேவையான சுகாதார தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகின்றது. எமது அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நட மாடும் கொள்கலன்கள் இடம்பெயர்ந் துள்ள மக்களின் பிரதேசங்களுக்கு விரை வாக அனுப்பி வைத்து அம்மக்களின் சுகாதார சேவைகளை தீர்க்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com