3 மாத குழந்தையின் வயிற்றில் சூடு: உயிர்காத்தது இராணுவம்
புதுமாத்தளன் பகுதியிலிருந்து தப்பிவந்த சிவிலியன்களை இலக்கு வைத்து புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று மாதக் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.தப்பிவந்தவர்களை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் தாயின் கையிலிருந்த குழந்தை படு காயமடைந்தது.
குழந்தையின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டது. செய்வதறியாத தாய் இராணுவத்தினரை நோக்கி ஓடிவந்து குழந்தையைக் காப்பாற்றுமாறு வேண்டினார்.
குழந்தையின் நிலையை அவதானித்த படைவீரர்கள் அந்த இடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கி குழந்தையின் உயிரைக் காப்பற்றினர். குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment