2169 சிவிலியன்கள் இராணுவத்திடம் தஞ்சம்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 2169 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
1983 பொதுமக்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தினரிடமும், 131 பொதுமக்கள் முனை பகுதியிலுள்ள கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினரிடம் தஞ்சமடைந்த 1983 பொதுமக்களில் 524 சிறுமிகள், 393 சிறுவர்கள், 534 ஆண்கள் மற்றும் 532 பெண்களும் அடங்குவர்.
புதுமாத்தளனிலிருந்து படகுகள் மூலம் தப்பி சுண்டிக்குளம் கடற்பரப்பின் ஊடாக முனை பிரதேசத்திற்கு 131 பொதுமக்கள் வருகைதந்துள்ளனர். அவர்களில் 66 சிறார்களும், 37 ஆண்களும், 28 பெண்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment