இரணப்பாலை மண் சந்தியில் புலிகளின் தயாரிப்பான பேபி மோட்டார்கள் மற்றும் 10 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த இருநாட்கள் நடந்த உக்கிர மோதல்களின் பின்னர் புலிகளின் இறுதி பாதுகாப்பு நிலைகளில் ஒன்றாக விளங்கிய இரணப்பாலை மண் சந்தியை விட்டு ஓடிய புலிகள் தமது தயாரிப்பான 8 பேபி மோட்டார்களை விட்டு ஓடிச் சென்றுள்ளனர். புலிகளின் தயாரிப்பான பேபி மோட்டார்கள் புலிகளின் யுத்தத்தில் பாரிய பங்காற்றி வந்திருகின்றது.
புலிகளால் மிகவும் இலகுவாக போக்குவரத்து செய்யகூடய வகையில் மாற்றி அமைக்கப்பட்டிருந்த பேபி மோட்டாருக்கு பயன்படும் குண்டுகளும் புலிகளின் தயாரிப்பிலானவை என்றும் அவை பாரிய சேதத்தை எற்படுத்த கூடியவை எனவும் தெரியவருகின்றது.
நேற்று இரணப்பாலை மண்சந்தியை பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த படையினர் அங்கு மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் சடலங்கள் பத்து, ரி 56 துப்பாக்கிகள் 22, தொலைத் தொடர்பு சாதனங்கள் 12 எனபவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைநெற் வன்னி நிருபர்
0 comments :
Post a Comment