Sunday, March 29, 2009

கடந்த 10 நாட்களுள் கபில் அம்மானில் தளபதி அடங்கலாக 504 புலிகள் சரணடைந்துள்ளனர்.

அரசாங்கத்தினால் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள யுத்த சூனியப் பிரதேசங்களில் இருந்து கடந்த பத்து நாட்களில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுள் வந்துள்ள மக்களுடன் 504 விடுதலைப் புலிகள் தமது குடும்பங்களுடன் வந்தடைந்துள்ளனர்.

சரணடைந்துள்ளவர்களுள் புலிகளின் புலனாய்வுத்துறையில் கபில் அம்மானின் பிரிவில் செயற்பட்டு வந்த லெப். கேணல் தர தளபதி ஒருவர் தனது குடும்பத்துடனும் , புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருந்த மேஜர் தரத்தில் உள்ள பெண்புலி ஒருவர் மற்றும் வட்டக்கச்சி பொலிஸ் நிலைய பொறுப்பாளர் குணரத்தினம் குகநேசன் உட்பட 504 புலிகள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுள் வந்துள்ளனர்.

இவர்களில் கடந்த 16ம் திகதி 63 பேரும் 24ம் திகதி 50 பேரும் வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சார்ள்ஸ் அன்ரனி, ராதா, இம்ரான்பாண்டியன், சோதியா, மாலதி ஆகிய படையணிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தள்ளதுடன் அவர்கள் அனைவரும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது அவர்கள் தாம் புலிகளியகத்தில் இணைந்து கொண்ட சூழ்நிலை மற்றும் இன்று அவர்கள் அங்கிருந்து வெளியேறிய நோக்கம் என்பவற்றை நீதிபதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களில் வாக்குமூலத்தை செவிமடுத்த நீதிபதி அவர்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இராணுவத்தரப்பினர் பொலிஸார் மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பாதுகாப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றை நீதிமன்றிற்கு சமர்ப்பித்திருந்தால் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்வதைத் தவிர்த்து மாற்று வழிகளை கைப்பற்றியிருக்க முடியுமெனவும் நன்கு பயிற்றப்பட்ட புலிகளை பொது மக்களுடன் இடைத்தங்கள் முகாம்களில் வைத்திருந்து அதனால் ஏற்படக்கூடிய அச்சுறத்தல்களை தவிர்த்திருக்க முடியுமெனவும் வவுனியா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com