தமிழகத் தலைவர்களுக்கு திரு ஆனந்தசங்கரி அவர்கள் எழுதியுள்ள மடல் .
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும்
அன்புடையீர்,
தமிழ்நாட்டின் இரண்டும் கெட்டான்நிலை
உலகநாடுகளில் இந்தியாவின் 28 மானிலங்களில் முப்பது கிலோ மீட்டர் இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மிக அண்மையிலுள்ள மானிலமாகிய தமிழ் நாடே ஏனைய இந்திய மானிலங்களிலும் பார்க்க இலங்கை பிரச்சினையில் கூடிய அக்கறை கொள்ள வேண்டிய மானிலமாகும். எமது மொழிகளாகிய தமிழும், சிங்களமும் எமது கலாச்சாரமும் இந்திய தொடர்புடையனவாகும். சிங்கள பௌத்தர்களும், இந்து தமிழர்களும், கணபதி, முருகன், ஈஸ்வரன், விஷ்ணு, பத்தினி, சரஸ்வதி, இலட்சுமி போன்ற பொது தெய்வங்களை வணங்குகின்றனர். இதில் ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில் சிங்களவர்கள் கணபதியை கணதெய்யோ எனவும், முருகனை கதிரகம தெய்யோ எனவும் அழைக்கின்றனர். பொது புதுவருடம் பொதுவான குடும்பப்பெயர்களை சிங்கள மக்களும், தமிழ் மக்களும் கொண்டுள்ளனர். சீதா, இலக்ஷ்மன், அருச்சுனன், இந்திரஜித் இலட்சுமி போன்ற பெயர்கள் பல தமிழர்களும்இ சிங்களவர்களும் உபயோகிக்கும் பொது பெயர்களாகும். தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் உள்ள சில அரசியல் தலைவர்கள் இருபக்க மக்களையும் தட்டி எழுப்ப உபயோகிப்பது தொப்புள் கொடி உறவை ஞாபகமூட்டியே. தமிழ் நாட்டு தமிழர்களுக்கும்இ இலங்கை தமிழர்களுக்கும் எவ்வாறு தொப்புள்கொடி உறவு இருக்கின்றதோ அதே போன்ற தொப்புள் கொடி உறவு சிங்கள மக்களுக்கும் மதுரை தமிழர்களுக்கும் உண்டு என்பதை பெருமளவிலான சிரேஸ்ட தமிழ்நாட்டு தலைவர்களும் தெரிpந்திருக்கமாட்டார்கள். இந்த உண்மையை தமிழ் நாட்டை சேர்ந்த 0.1மூ மக்கள் கூட அறிந்திருக்கமாட்டார்கள்.
இந்த உண்மை மதுரையை சேர்ந்த பிரபல நடிகர்களாகிய திருவாளர்கள் விஐயகாந், விவேக், வடிவேலு போன்றவர்களின் கண்களைத்திறக்கும் என நம்புகிறேன். சிங்கள சமூகத்தின் ஸ்தாபகர் கூட விஐயன் என்ற பெயரை கொண்டவராவர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பல பின்னிப்பிணைப்புகள் உண்டு. பல கலப்புத்திருமணங்கள் நடந்தேறி பிரிவுகளின்றி வாழ்கின்றனர்.
அம்மன் கோவில், காளிகோவில் போன்றவற்றில் பூஜை நேரம் பிரசன்னமாகி இருப்பவர்கள் இந்து பெண்களிலும் கூடுதலானவர்கள் சிங்கள பௌத்த பெண்களே. தமிழ் பௌத்தர்களும். சிங்கள சைவர்களும் இலங்கையில் ஏன் இல்லை என்பதை இவ் உதாரணம் விளக்குகின்றது. வெவ்வேறு மொழி பேசும் ஒன்றவிட்ட சகோதரர்களே சிங்களவரும் தமிழருமாவர். என்று இவ்விரு இனங்களும் ஒருவருக்கொருவர் மற்றவரின் மொழியை தாராளமாக பேச பழக முடிகிறதோ அன்று நம் நாட்டு இனப்பிரச்சினை தானாக மறைந்துவிடும்.
துரதிஷ்டவசமாக தமிழ் நாட்டு தமிழர் இலங்கை பற்றி அதிகம் தெரியாமலும். களநிலைமைபற்றி பெரிதாக அறிந்து கொள்ளாமலும் தமிழர் பிரச்சினைகளுக்கு பெரும் பங்கம் ஏற்படுத்திக்கொண்டு இருப்பது பற்றி உணராமல் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் தப்பாக வழிநடத்தப்பட்டு இரண்டு மூன்றுஅரசியல் கட்சிகள் நீங்கலாக ஏனையவை எல்லாம் எமது பிரச்சினையை வைத்து பந்தாடி ஒருவரை ஒருவர்மிஞ்சி செயற்படுகின்றனர். மேலும் மேலும் அடி வாங்கும் பந்தால் நிச்சயம் துன்பத்தை இனிதாங்க முடியாது இங்கே பந்தாக குறிப்பிடப்படுவது அப்பாவித்தமிழ் மக்களையே. சில தலைவர்களால் தப்பாக வழிநடத்தப்பட்ட தமிழ் நாடு அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டியதால் தீங்கே விளைந்தது. நாளுக்கு நாள் பிரச்சினை மேலும் சிக்கலடைந்து தீர்வுக்கு அண்மிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மனிதசங்கிலி, ஹர்த்தால், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள். இரயில் மறியல், போராட்டம் ஆகியவையும் அதுபோன்ற வேறு பல நடவடிக்கைகளும் எதுவித பயனும் தராத பிரயோசனமற்றதாகவே அமைந்துவிட்டது. சில சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் அவர்கள் அங்கத்துவம் வகிக்கும் தொழிலுக்கு ஓவ்வாததாக அமைந்தது. பாடசாலை மாணவர்களை, பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபடுத்துவதும் பௌத்த குருமாரை அவமதித்தல் போன்றவை எதிர்பார்த்த இலக்கினை அடையாது எதிர்விளைவாகவே அமைந்தன.
தமது நலனுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியும் பிழையான வழியை கையாளக்கூடாது. இலங்கைக்கு வந்து இனப்பிரச்சினை தீர்வுக்கு முயற்சியுங்கள் என பல நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அந்த நேரத்தில் நான் எடுத்த முயற்சிகள் பெரும் வெற்றியை தந்திருந்த நேரம். இலங்கையிலும் இந்தியாவிலும் நாடு பிரிவதை எவரும் ஆதரிக்காமையால் இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வுக்கு ஆதரவு தேடியிருந்தேன். எமது பிரதேசங்களுக்கு, தமிழ் நாடு உட்பட இந்திய மானிலங்களின் முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களை வழங்குமாறு கேட்டிருந்தேன்.
அண்மையிலும் தமிழ் நாட்டு முதலமைச்சரை ஒரு தடவை இலங்கைக்கு விஐயம் செய்யுமாறு அழைத்திருந்தேன். அதை தொடர்ந்து இலங்கை ஐனாதிபதியும் அவருக்கு அழைப்புவிட்டிருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எவருக்கும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. இன்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பலர் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் மக்கள் அனுபவித்த விடுதலைப்புலிகளின் கொடூர ஆட்சியைப்பற்றி அறியாது விடுதலைப்புலி தலைவர் திரு.பிரபாகரனையும். அவரின் கொடூர அணியினையும் காப்பாற்ற விரும்புகின்றனர். இத்தகைய கொடூர ஆட்சியின் கீழ் கஷ்டப்பட்ட தமிழ் மக்கள் தம்மை புலிகளிடமிருந்து மீட்டுத் தரும்படியே வேண்டி நிற்கின்றனர். கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவன் என்ற கோதாவில் நானே ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் உட்பட பல அதிகாரிகளை விடுதலைப்புலிகளிடமிருந்து எமது மக்களை மீட்டுத் தரும்படி கேட்டிருந்தேன்.
அரச படைகளால் மீட்கப்பட்ட மக்கள் தற்போது அகதி முகாம்களில் உள்ளனர். இன்றைக்கேனும் சில தமிழ் நாட்டுத் தலைவர்கள் நேரடியாக வந்து அகதிகளிடம் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் ஆட்சியில் வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தது அவர்களின் பிள்ளைகள் எவ்வாறு போர்க்களத்தில் பலிகொடுக்கப்பட்டார்கள் போன்றவற்றை கேட்டறியக்கூடாதா?.
இன்னும் மீட்டதற்கு ஒரு சிறு பகுதியே இருக்கும்போது அத்துடன் மக்களே தம்மை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டுத்தாருங்கள் என்று வற்புறுத்தும்போது. எந்த அரசு யுத்தத்தை நிறுத்த சம்மதிக்கும்? நியாயமற்ற ஓர் கோரிக்கையை முன்வைத்துவிட்டு மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?.
இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை தமிழ் நாடு அறியவேண்டும்.
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடவேண்டுமென ஓர் புதிய கோரிக்கை தற்போது சில தலைவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. இது புத்திசாலித்தனமான செயல் அல்லவென கைவிடப்படவேண்டும். தமிழ்நாடு இலங்கை பிரச்சினையில் உதவ வேண்டுமானால் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளிடம் அகப்பட்டு தவிக்கும் அப்பாவி மக்களை விடுவிக்க வேண்டும். மறுப்பின் விடுவிக்குமாறு எச்சரிக்கை விட வேண்டும். ஏனெனில் கடந்த 10 நாட்களாக பாதிப்புள்ளானோரின் எண்ணிக்கை மிகவும் கூடியுள்ளது. அதற்கு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
விரைவில் ஒரு நாள் விடுதலைபுலிகள் தோல்வியை தழுவத்தான் போகிறார்கள். ஆகவே எஞ்சியுள்ள விடுதலைப்புலிப் போராளிகளையும் அவர்களால் பலாத்காரமாக பிடித்துவைக்கப்படடிருக்கும் பொதுமக்களையும் உடன் விடுவிக்கவேண்டிய கடமை தமிழ் நாட்டையே சாரும். தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் எவரேனும் விடுதலைப்புலிகளிடம் ஏன் தம் கட்டுப்பாட்டுக்குள் பலாத்காரமாக வைத்திருக்கும்தமிழ் மக்களை விடுவித்து அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் மக்கள் ஒழுங்காக கவனிக்கப்படும் பிரதேசத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என இன்றுவரை கேட்கவில்லை. இது ஏன் என எனக்குப் புரியவில்லை. இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பது ஆச்சரியமே.
பலமாதங்களுக்கோ அன்றி சில வருடங்களுக்கோ தம் சொந்த வீடுகளுக்கு போவது நிச்சயமற்ற நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வவுனியா மன்னார் மாவட்டங்களின் சில பகுதியிலும் வாழ்ந்த 50இ000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். இந்த மக்கள் தம் வீடுகளை விட்டு ஓடும்போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கைவிட்டு கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடினர். அவர்கள் வீடுதிரும்பும் வேளை வீட்டு ஓடுகள் கூட மிஞ்சாது. 50இ000 குடும்பத்தினரின் சொத்துக்களின் கூட்டுப்பெறுமதி எவ்வளவாக இருக்கும் என தமிழ் நாட்டு மக்கள்; கணக்கிடத்தெரியாதவர்கள் அல்ல. தமிழ் நாட்டவர் இலங்கை தமிழருக்கு செய்யக்கூடிய பெரும் உதவி இந்த சொத்துக்களை பாதுகாத்துக் கொடுப்பதே. யுத்த நிறுத்த மூலமே இதை செய்ய முடியும். யுத்தம் நிறுத்தப்படடு விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிடுவார்களேயானால் நாடோடிகள் போல் வாழும் மக்கள் விரைவில் தம் வீடுகளுக்கு திரும்பி இழந்த உறவினர்களை மீளப்பெற முடியாவிட்டாலும் எஞசியுள்ள தமது சொத்துகளை காப்பாற்ற முடியும்.
தமிழ் நாடு விழித்தெழுந்து விடுதலைப்புலிகளுக்கு 'இனி போதும்' என்று கூற வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தப்பாக தூண்டிவிட்டதால் பாதிப்புக்குள்ளான இலங்கை தமிழ்நாடு ஆகியவற்றின் நல்லுறவை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். அத்துடன் தமது தனி நாட்டுக்கோரிக்கையை விடுதலைப்புலிகள் கைவிட்டு ஆயுதங்களையும் ஒப்படைத்துவிட்டு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த ஓர் தீர்வுக்கு ஒத்துகொள்ளவைக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் முரண்பட்டு இருக்ககூடாது என படுகொலை செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அடிகள் கூறியதை தமிழ் நாட்டுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ
0 comments :
Post a Comment