Saturday, February 14, 2009
மன்னார் ஆயர் குழுவினர் - வன்னிப் பிராந்தியப் பொறுப்பாளர் சந்திப்பு.
நேற்று 13ந் திகதி மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப் தலைமையிலான குழு வன்னிப் பிராந்தியத்திற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவை, வன்னியிலுள்ள இராணுவத்தலைமையகத்தில் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் கலந்துரையாடினர்.
இதில் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான மருந்து மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு முழு ஆதரவினை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இங்கு மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா கருத்துத் தெரிவிக்கையில்: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வரும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அனைத்து முகாம்களிலும் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment