கிழக்கு மாகாணத்தை சிறந்த கைத்தொழில் மாகாணமாக கட்டியெழுப்ப கிழக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலீட்டாளருக்கு முரளிதரன் எம்பி வேண்டுகோள்.
கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் என்ற தொனிப் பொருளில் முதலீட்டாளர்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போது கிழக்கு மாகாணத்தை சிறந்த கைத்தொழில் மாகாணமாக கட்டியெழுப்ப கிழக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலீட்டாளருக்கு வேண்டுகோளை முன்வைத்த முரளிதரன் எம்பி கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு கைத்தொழில் துறை மேம்பாடு மிகவும் அவசியமானது அத்தோடு இம் மாகாணத்தில் வாழுகின்ற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் கைத்தொழில் அபிவிருத்தி மிக அவசியம் என குறிப்பிட்டதுடன் கிழக்கில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இவ் கலந்துரையாடலில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார கெல்கம அவர்களும் அரச உயரதிகாரிகளும் மற்றும் பெருந்திரளான முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment