கஞ்சிகுடிச்சாற்றில் பொறிவெடியில் சிக்கி ஒருவர் காலிழப்பு.
அம்பாறை - கஞ்சிகுடிச்சாற்றுப் பிரதேசத்தில் புலிகளின் மிதிவெடியில் சிக்கி விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் காலிழந்துள்ளார்.
இக்குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக புலிகளின் சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி தொடர்பாக விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இலங்கை நெற்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்:
உண்மைக்குப் புறம்பாக புலிகள் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களில் ஒன்று இது எனவும், நேற்று வெடித்துள்ள வெடிகூட சிலவருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்டதெனவும், தற்பொழுது கஞ்சிகுடிச்சாற்றுப் பிரதேசம் தமது பூரணகட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இப்பிரதேசம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த காட்டுப்பகுதிகளில் தாம் மிதிவெடிகளை அகற்றியுள்ள போதும் ஆங்காங்கே சில தவறப்பட்டுள்ளதால் அவை இவ்வாறான தாக்கங்களைக் கொடுப்பது தவிர்க்கமுடியாதது எனவும் கூறினார்.
0 comments :
Post a Comment