வெருகல் ஈச்சலம்பற்று மூதூர் கிழக்குப் பகுதி மக்கள் மற்றும் மாணவர்களை விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி சந்தித்து கலந்துரையாடல்.
வெருகல் ஈச்சலம்பற்று மூதூர் கிழக்குப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை உடன் பூர்த்தி செய்து கொடுக்க விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக முரளிதரன் ஈச்சலம்பற்று பிரதேசத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு அப்பகுதிக்கான பொலிஸ் மற்றும் இராணுவ தலைமை அதிகாரிகளையும் அரசஅதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்கள் அனைவரும் ஈச்சலம்பற்று ஸ்ரீ செண்பகா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மக்கள் கலந்துரையடலிலும் கலந்து கொண்டு மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு நேரடித் தீர்வை முன்வைத்தனர்.
இங்கு பாதுகாப்பு பிரச்சனைகளான மீள்குடியேற்ற விடையங்கள், ஆட்கள் கடத்தப்படுதல், மீன்பிடித்தொழில் தடைகள், காட்டுத் தொழிலுக்கான தடைகள் போன்றவற்றை குறைப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அடிப்படை குறைபாடாக உள்ள ஆசிரியர் பற்றாக்குறை, மின்சாரவசதி, விளையாட்டுமைதானம், தளபாடம் போன்றவற்றையும் படித்த வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைகளை மிக விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.
0 comments :
Post a Comment