பிரித்தானிய பிரதமர் கோர்டோன் பிறவுன் அவர்கள் இலங்கையின் இன்றைய நிலமைகளை அவதானித்து போரினை முடிவுக்கு கொண்டு வந்து ஓர் அரசியல் இறுதித் தீர்வை காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான டெஸ் பிறவ்னே அவர்களை இலங்கைக்கான தனது விசேட பிரதிநிதியாக நியமித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக கூடிய இலங்கை அமைச்சரவை அந்நியமனத்தை நிராகரித்திருந்தது. இதனையறிந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட் அவர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியைத் தெரிவித்ததுடன் நிராகரிப்புத் தொடர்பான விளக்கத்தையும் கோரியிருந்தார்.
அதற்கு விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் , இது சம்பந்தமான பூரண அறிக்கை எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இருநாடுகளும் தொடர்ந்தும் நெருக்கமான உறவைப் பேணி ஓர் முடிவு காண்பதெனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment